செம "ஹாட்ரிக்".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி

துபாய்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.26) டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் மும்பை, பெங்களூரு அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

ஆர்சிபி அடுத்த கேப்டன் பொல்லார்ட்?.. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு.. அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்ஆர்சிபி அடுத்த கேப்டன் பொல்லார்ட்?.. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு.. அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்

 ஃபார்முக்கு வந்த மேக்ஸ்வெல்

ஃபார்முக்கு வந்த மேக்ஸ்வெல்

இப்போட்டியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், பும்ரா ஓவரில் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேற, ஆர்சிபி-க்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், 2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், மும்பை பவுலர்களை தண்ணீர் கொடுக்க வைத்தனர். இருவரும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என்று விளாச, ரன்கள் ராக்கெட் வேகத்தில் எகிறியது. பிறகு ராகுல் சாஹர் ஓவரில் பரத் 32 ரன்களில் அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கினார். கடந்த சில போட்டிகளில் தடுமாறிய மேக்ஸ்வெல், இன்று சில பல சிக்ஸர்களை பறக்கவிட ரன்கள் டீசண்ட்டாக வந்து கொண்டிருந்தது. இடையில் அரைசதம் அடித்த விராட் கோலி, 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டாக, பிறகு டி வில்லியர்ஸ் - மேக்ஸ்வெல் ஜோடி இணைந்தது. இருவரும் மும்பை பந்துவீச்சை விளாசித் தொடங்கினர். மேக்ஸ்வெல் 33 பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். பெங்களூரு 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. பிறகு, மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் கேட்ச் ஆனார். அதற்கு அடுத்த பந்திலேயே, 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸும் அவுட்டானார். எனினும், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

 இருவர் மட்டும் டபுள் டிஜிட்

இருவர் மட்டும் டபுள் டிஜிட்

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் - டி காக் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். ரோஹித் 43 ரன்களும், டி காக் 24 ரன்கள் எடுத்து அவுட்டான பிறகு, ஒட்டுமொத்த மும்பை அணியின் பேட்டிங்கும் கொலாப்ஸ் ஆக தொடங்கியது. அதன் பிறகு ஒருவர் கூட இரட்டை இலக்கை எட்டவில்லை. இஷான் கிஷன் 9 ,சூர்யகுமார் யாதவ் 8, க்ருனால் 5 என்று அடுத்தடுத்து அவுட்டானார்கள். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் மற்றும் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் அடித்தால் வெற்றி, இல்லையெனில் தோல்வி என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், ஹர்ஷல் படேல் ஒரே ஓவரில் டோட்டல் மேட்சையும் முடித்துவிட்டார்.

 ஹர்ஷல் படேல் அபாரம்

ஹர்ஷல் படேல் அபாரம்

16.1, 16.2, 16.3 என்று வரிசையாக மூன்று பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர் என்று மும்பை அணியின் கடைசி நம்பிக்கையை ஹாட்ரிக் விக்கெட் மூலம் தகர்த்தெறிந்தார் ஹர்ஷல் படேல். இதன் மூலம், பெங்களூரு அணியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஹர்ஷல் பெற்றுள்ளார். இறுதியில், மும்பை அணி 18.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, சாஹல் 4 ஓவர்கள் வீசி, வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

 மும்பை 7வது இடம்

மும்பை 7வது இடம்

இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில், மும்பை 10 போட்டிகளில் 6வது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அதேசமயம், பெங்களூரு அணி 10 போட்டிகளில் விளையாடி 6வது வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. மும்பை மீண்டும் தோல்வியை சந்தித்து இருப்பதன் மூலம், அதன் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
rcb beat mi harshal patel took hat-trick - ஹர்ஷல் படேல்
Story first published: Sunday, September 26, 2021, 23:34 [IST]
Other articles published on Sep 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X