For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மார்கன், ரஸ்ஸல் விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்... பர்ப்பிள் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் ஆர்சிபி பௌலர்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 10வது போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய நிலையில்38 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்ஷல் படேல்.

அவமானங்களை தாண்டி சாதித்து காட்டிய ஆல்-ரவுண்டர்... நம்பிக்கையை பொய்யாக்காத ஆர்சிபி வீரர் அவமானங்களை தாண்டி சாதித்து காட்டிய ஆல்-ரவுண்டர்... நம்பிக்கையை பொய்யாக்காத ஆர்சிபி வீரர்

இதுவரை ஆர்சிபி விளையாடியுள்ள 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் முக்கிய சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார் ஹர்ஷல்.

10வது போட்டி

10வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 10வது போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய நிலையில் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஆர்சிபி தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கேகேஆர் அணி திணறல்

கேகேஆர் அணி திணறல்

முதலில் ஆடிய ஆர்சிபி 205 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக கொடுத்த நிலையில், அடுத்து ஆடிய கேகேஆர் அணி அந்த இலக்கை பூர்த்தி செய்ய முடியாமல் திணறியது. அணியின் ஆன்ட்ரே ரஸ்ஸல் மற்றும் கேப்டன் இயான் மார்கன் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை அணிக்கு சேர்த்தனர்.

சிறப்பான பேட்டிங், பௌலிங்

சிறப்பான பேட்டிங், பௌலிங்

இதையடுத்து அந்த அணி மொத்தத்தில் 166 ரன்களை மட்டுமே அடித்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. முதலில் ஆடிய ஆர்சிபி அணி வீரர்கள் க்ளென் மாக்ஸ்வெல் ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பான பேட்டிங்கை தந்தனர். தொடர்ந்து அணியின் பௌலர்களும் சிறப்பாக பந்து வீசினர்.

கேகேஆர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்

கேகேஆர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்

சஹல் 2 விக்கெட்டுகளையும் ஜாமீசன் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். ஆர்சிபி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேகேஆர் அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். தினேஷ் கார்த்திக், பாட் கமின்ஸ் ஆகியோர் ஒன்றை இலக்க ரன்களின் அவுட்டாகி வெளியேறினர்.

ஹர்ஷல் படேல் அபாரம்

ஹர்ஷல் படேல் அபாரம்

ஹர்ஷல் படேல் இன்றைய போட்டியிலும் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய 2 முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். கேப்டன் இயான் மார்கன் மற்றும் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

9 விக்கெட்டுகள்

9 விக்கெட்டுகள்

இந்நிலையில் கடந்த 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்ஷல் படேல். இதையடுத்து ஐபிஎல் பர்ப்பிள் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இன்றைய போட்டியில் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 19:39 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
RCB bowler Harshal Patel tops in the race of Purple cap in the IPL 2021 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X