For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 பேரை வச்சு பிராக்டீஸ் மேட்ச்... ஒரு முடிவோடத்தான் இருக்காங்க ஆர்சிபி!

சென்னை : ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது ஆர்சிபி அணி.

தனது முதல் போட்டியில் வரும் 9ம் தேதி சென்னையில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் ஆர்சிபி மோதவுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அணிக்குள்ளேயே 12 வீரர்களை மட்டுமே கொண்டு பயிற்சி போட்டியை நடத்தி முடித்துள்ளது.

5 தினங்களில் துவக்கம்

5 தினங்களில் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடரின் துவக்கத்திற்கு இன்னும் 5 தினங்களே உள்ளன. ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளின் பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கோப்பையை வெல்லும் தீவிரம் அனைத்து அணிகளுக்குள்ளேயும் உள்ளன. வரும் 9ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடர் மே மாதம் 30ம் தேதிவரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

ஆர்சிபி தீவிரம்

ஆர்சிபி தீவிரம்

இந்நிலையில் கடந்த முறை ப்ளே ஆப் சுற்றிற்குள் நுழைந்து கோப்பை கனவுடன் விளையாடிய ஆர்சிபி அணி, எஸ்ஆர்எச் அணியிடம் எலிமினேட்டர் சுற்றில் தோற்றது. 14 சீசன்களில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அந்த அணி இந்த முறை கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.

12 வீரர்கள் பங்கேற்பு

12 வீரர்கள் பங்கேற்பு

இதன் ஒரு பகுதியாக, இந்த முறை சென்னையில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுவரும் அந்த அணி, இன்றைய தினம் அணிக்குள்ளேயே பயிற்சி போட்டியில் ஈடுபட்டது. வீரர்கள் சிலர் இன்னும் தங்களது குவாரன்டைனை முடிக்காமல் உள்ள நிலையில் மொத்தம் 12 வீரர்கள் மட்டுமே இரு பிரிவாக பிரிந்து இந்த பயிற்சி போட்டியில் விளையாடினர்.

கலக்கல் பிரபுதேசாய்

கலக்கல் பிரபுதேசாய்

அணி வீரர்களின் திறனை அறியும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சஹல், சைனி, சிராஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் ரஜத் படேடார் 35 பந்துகளில் 54 ரன்களை அடித்து அனைவரையும் கவர்ந்தார். இதேபோல சுயாஷ் பிரபுதேசாய் 15 பந்துகளில் 25 ரன்களை அடித்து கலக்கல் ஆட்டத்தை அளித்தார்.

ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன்

ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன்

முதலில் ஆடிய அணி 153 ரன்களை அடித்தது. அடுத்ததாக சைனி 40 ரன்களையும் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் சஹல் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆல்-ரவுண்டர் ஹர்ஷல் படேல் தேர்வானார். இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் அதிரடி காட்டினார்.

எதிரணிக்கு 'டப்'

எதிரணிக்கு 'டப்'

மொத்தத்தில் இந்த போட்டியின் மூலம் தங்களது வீரர்களின் திறனை சிறங்பபாக அறியும் முயற்சியில் ஆர்சிபி வெற்றி கண்டுள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் கனவுடன் அந்த அணி களமிறங்கியுள்ள நிலையில், எதிரணிகளுடன் அந்த அணி சிறப்பான போட்டிகளை விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, April 4, 2021, 16:41 [IST]
Other articles published on Apr 4, 2021
English summary
Harshal Patel won Man of the Match for his all-round performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X