For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனைவியுடன் சாஹல் போட்ட ஸ்டைலிஸ் நடனம்.. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

ஹரியானா: கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வீரர்கள் தங்களது வீடுகளில் ஓய்வில் உள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்!இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.. இலங்கை தொடருக்கான கோச் இவர்தான்!

அந்தவகையில் யுவேந்திர சாஹல் தற்போது வீட்டில் இருந்துக்கொண்டு பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராம் ரீல்களை செய்து வருகிறார்.

புதிய வீடியோ

யுவேந்திர சஹால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் 65 லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த சாஹல் தற்போது தனது மனைவி தனஸ்ரீ வெர்மா உடன் இணைந்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

படு வைரல்

படு வைரல்

மேகன் வான்ஜிக் இசை ஒன்றுக்கு அவரும் அவரது மனைவி தனஸ்ரீ-ம் இணைந்து உட்கார்ந்தபடியே நடன அசைவுகளை செய்துள்ளனர். வீடியோ வெளியிட்ட 2 மணி நேரத்தில் சுமார் 2,50,000 லைக்குகளை ரசிகர்கள் அள்ளி வீசியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 1000 பேருக்கும் மேல் கமெண்ட் செய்துள்ளனர். சஹாலின் குறும்பு தனத்தை விரும்பும் ரசிகர்கள் இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

ஐபிஎல் சொதப்பல்

ஐபிஎல் சொதப்பல்

யுவேந்திர சாஹலுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. முதல் 2 போட்டிகளில் விக்கெட் எதுவுமே எடுக்காத அவர், 3வது போட்டியில் இருந்துதான் விக்கெட் எடுக்க தொடங்கினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை எடுத்துள்ளார். இவரின் மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

எனினும் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் வரும் ஜூலை மாதம் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த வாய்ப்பை சாஹல் சரியாக பயன்படுத்திக்கொண்டால் டி20 உலகக்கோப்பையில் சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, June 15, 2021, 19:50 [IST]
Other articles published on Jun 15, 2021
English summary
RCB Player Yuzvendra Chahal makes a dance video with wife Dhanashree goes viral on Internet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X