சொல்லாமல் அடித்த கில்லி... சிஎஸ்கேவுக்கு முன்னதாகவே பயிற்சியை துவங்கிட்டாங்க ஆர்சிபி!

பெங்களூரு : வரும் 8, 9 தேதிகளில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் தங்களது பயிற்சி ஆட்டங்களை துவங்கவுள்ளனர் சிஎஸ்கே வீரர்கள். இதற்கென கேப்டன் தோனி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

ஐபிஎல் 2021 தொடரின் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இவர்கள் தங்களது பயிற்சிகளை துவங்கவுள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்கள் தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ளனர். முக்கிய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பிசியாக உள்ள நிலையில் மற்ற வீரர்கள் இந்த பயிற்சிகளை துவக்கியுள்ளனர்.

அணியை முதலிடத்துக்கு கொண்டு போய்ட்டுதான் ரெஸ்ட் எடுப்பேன்... பெங்களூரு எப்சி புதிய கோச் நம்பிக்கை!

ஐபிஎல் பணிகளும் ஜரூர்

ஐபிஎல் பணிகளும் ஜரூர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான போட்டித் தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2021 தொடருக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஐபிஎல் 2021 தொடர் துவங்கும் தேதி மற்றும் இடம் குறித்து இன்னும் பிசிசிஐ இறுதி முடிவெடுக்கவில்லை. மாறாக கொரோனா தாக்கம் இந்தியாவில் தொடரும் நிலையில் இங்கேயே ஐபிஎல் நடக்குமா அல்லது யூஏஇயில் நடத்தப்படுமா என்பது என்பது குறித்து விரைவில் திட்டமிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்நிலையில் வரும் 8, 9 தேதிகளில் ஐபிஎல் தொடரையொட்டி சிஎஸ்கே தனது பயிற்சி போட்டிகளை சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதையொட்டி அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களும் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.

பயிற்சியை துவக்கிய ஆர்சிபி

பயிற்சியை துவக்கிய ஆர்சிபி

இதனிடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணி தனது பயிற்சி போட்டிகளை நேற்று முதலே துவங்கியுள்ளது. அணியின் முக்கிய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் ஹர்சல் படேல், ரஜட் படேடார், ஷாபாஸ் அகமது மற்றும் சுயூஸ் பிரபுதேசாய் ஆகியோர் தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RCB Players Included Harsha patel, Rajat Patidar starts practice at Chinnaswamy stadium
Story first published: Friday, March 5, 2021, 13:09 [IST]
Other articles published on Mar 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X