கோலி மீதான அன்பு மிகுதியால் ஆர்சிபி வீரர் செய்த விஷயம்.. இப்படி ஒரு பக்தனா.. பூரிப்படைந்த ரசிகர்கள்!

கேரளா: விராட் கோலி மீது உள்ள அன்பு மிகுதியால் இளம் வீரர் ஒருவர் செய்துள்ள விஷயம் ரசிகர்களை பூரிப்படைய செய்துள்ளது.

Kohli மீதான அன்பு...Mohammed Azharuddeen செய்த விஷயம் | OneIndia Tamil

ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கான ரசிகர் இளம் வீரர் முகமது அசாருதீன்.

32 வயது சூரன்.. சூப்பர் ஸ்டார்ஸ்களே 'கப்சிப்'.. உலகில் அதிக சம்பளம் - Forbes லிஸ்ட்

யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணியே ஏலத்தில் எடுத்தது. ஆரம்ப தொகையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

அசாருதீன்

அசாருதீன்

கேரளா மாநிலத்தின் கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் இளம் வீரர் முகமது அசாருதீன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த இவர் ஐபிஎல்-ல் பங்கேற்க கடந்த 5 ஆண்டுகளாக போராடி வந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டக் கோப்பையில் மும்பைக்கு எதிராக 54 பந்துகளில் 137 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் ஆர்சிபி அணி அவரை ஏலத்தி எடுத்தது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

விராட் கோலியின் தீவிர ரசிகனான இவர், அவருடன் இணைந்து ஓப்பனிங் ஆட வேண்டும் என ஆசையை தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் அது நிறைவேறவில்லை. ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய போதும் முகமது அசாருதினுக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. டாப் ஆர்டரில் செட்டில் பேட்ஸ்மேன்கள் உள்ளதால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

தீவிர பக்தன்

தீவிர பக்தன்

ஆனால் அதை எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத அசாரூதின் ஒரு ஃபேன் பாயாக கோலி குறித்து தொடர்ந்து பதிவுகளை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் பயங்கரமாக வைரலானது.

புகைப்படம்

புகைப்படம்

இந்நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அசாரூதினுக்காக, விராட் கோலி தனது ஜெர்ஸியில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், கோலி கையெழுத்திட்டுள்ள இந்த ஜெர்ஸியை போட்டோ ஃப்ரேம் போட்டு வைத்துக்கொள்வே என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கோலிக்கு இப்படி ஒரு தீவிர பக்தனா என பூரிப்படைந்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RCB's Mohammed Azharuddeen to Frame the Jersey that autographed by Virat kohli
Story first published: Thursday, May 13, 2021, 15:40 [IST]
Other articles published on May 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X