For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் பேரை சொன்னாலே கதிகலங்கும் எதிரணிகள்.. 2019 ஐபிஎல் நாயகனாக மாறிய “காட்டடி மன்னன்” ரஸ்ஸல்!

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரின் நாயகனாக மாறி இருக்கிறார் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

1
45773

கொல்கத்தா ஆடிய நான்கு போட்டிகளிலும் கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்து கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயரவும், சேஸிங்கில் வெற்றி பெறவும் உதவியுள்ளார் ரஸ்ஸல். அதிலும் நேற்று நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய அதிரடி ஆட்டம் "வேற லெவல்".

RCB vs KKR: ரசல் ரணகளம்...! 7 சிக்சர்கள்..! 13 பந்துகளில் 48 ரன்கள்.. கோலியால ஒண்ணும் பண்ண முடியல RCB vs KKR: ரசல் ரணகளம்...! 7 சிக்சர்கள்..! 13 பந்துகளில் 48 ரன்கள்.. கோலியால ஒண்ணும் பண்ண முடியல

பெங்களூர் அதிரடி

பெங்களூர் அதிரடி

பெங்களூர் அணி நான்கு போட்டிகளில் தோற்று அவமானத்தில் கூனிக் குறுகிப் போய், ஐந்தாவது போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் முதல் பேட்டிங் செய்து, அதிரடியாக 205 ரன்கள் குவித்தது

ரஸ்ஸல் வந்தார்

ரஸ்ஸல் வந்தார்

206 என்ற கடின இலக்கை சேஸிங் செய்த கொல்கத்தா 16 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது வந்தார் ரஸ்ஸல். 18வது ஓவரில் இருந்து தன் அதிரடியை துவக்கினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.

2வது ஹாட்ரிக் சிக்ஸ்

2வது ஹாட்ரிக் சிக்ஸ்

19வது ஓவரில் மீண்டும் ஒரு ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மிரள வைத்தார். 18வது ஓவரில் 23 ரன்கள், 19வது ஓவரில் 29 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து கொல்கத்தா இமாலய வெற்றி பெற்றது.

அதிர்ந்த பெங்களூர்

அதிர்ந்த பெங்களூர்

ரஸ்ஸல் 13 பந்துகளில் 48 ரன்கள் குவித்து பெங்களூரை அதிர வைத்தார். அந்த 13 பந்துகளில் 7 சிக்ஸர்கள் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் ரஸ்ஸல் தொடர்ந்து நான்காவது முறையாக இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடிக் காட்டியுள்ளார்.

தொடர் ரன் குவிப்பு

தொடர் ரன் குவிப்பு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 19 பந்துகளில் 49*, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 48 ரன்கள், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 28 பந்துகளில் 62 ரன்கள், கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 48 ரன்கள் என எதிரணிகளை தொடர்ந்து கதிகலங்க வைத்து வருகிறார் ரஸ்ஸல்.

அதிகரித்து வரும் அதிரடி

அதிகரித்து வரும் அதிரடி

இவரது அதிரடி ஒவ்வொரு போட்டிக்கும் அதிகரித்து வருவது தான் இதில் சுவாரஸ்யம். இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 போட்டிகளில் 207 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 103 ஆகும். அதை விட கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார் ரஸ்ஸல்.

Story first published: Saturday, April 6, 2019, 11:11 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
RCB vs KKR : Andre Russell thrashed down RCB to their fifth consecutive loss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X