தினேஷ் கார்த்திக் தான் காரணம்.. பதற்றத்தில் செய்த அந்த ஒரு தவறு.. ஆர்சிபி -ன் கனவு தகர்ந்தது எப்படி?

அகமதாபாத்: தினேஷ் கார்த்திக் செய்த ஒரே ஒரு தவறால் ஆர்சிபியின் கோப்பை கனவு, கனவாகவே சென்றுவிட்டது.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின

“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

என்ன தப்பு ஏற்பட்டது

என்ன தப்பு ஏற்பட்டது

குறைந்த இலக்கை நிர்ணயித்ததால், சிறப்பான பவுலிங்கை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஆர்சிபி அணிக்கு வந்தது. அந்தவகையில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை 21 ரன்களுக்கும், கேப்டன் சஞ்சு சாம்சனை 23 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேற்றியது. தேவ்தத் பட்டிக்கலும் 9 ரன்களுக்கு நடையை கட்டினார். அத்தனை விஷயங்களும் சரியாக அமைந்த போதும் ஆர்சிபியின் கனவு பாலனது. இதற்கு காரணம் தினேஷ் கார்த்திக் தான்.

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

ஆட்டத்தின் 10வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய முதல் பந்தை அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் ட்ரைவ் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து பேட்டில் எட்ஜாகி கீப்பரிடம் கேட்ச்சாக சென்றது. வழக்கமான கேட்ச்-ஆக சுலபமாக வந்த பந்தை தினேஷ் கார்த்திக் தவறவிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பதற்றத்தினால் பந்தின் திசையை சரியாக அவரால் கணிக்க முடியாமல் போனது எனக்கூறப்படுகிறது.

விளைவு என்ன தெரியுமா

விளைவு என்ன தெரியுமா

ஆனால் தினேஷ் கார்த்திக் விட்ட அந்த ஒரு கேட்ச்-ஆல் ஜாஸ் பட்லர் எமனாக மாறி நின்றார். அந்த சமயத்தில் பட்லர் 66 ரன்களை குவித்திருந்தார். அப்போதே அவரை அவுட்டாக்கியிருந்தால் திருப்புமுணை ஏற்பட்டிருக்கும். அதன் பின்னர் அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தால் 59 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மேலும் வெற்றிக்கும் காரணமாக அமைந்தார்.

மோசமான ரெக்கார்ட்

மோசமான ரெக்கார்ட்

நடப்பு தொடரில் ஆர்சிபி அணி பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு தினேஷ் கார்த்திக் தான் காரணமாக அமைந்தார். ஆனால் இன்று அவரே ஆர்சிபியின் கனவை வீணடித்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு தொடரில் அதிக கேட்ச்களை விட்ட விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக் 10 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dinesh karthik misfield in RCB vs RR Match ( ஆர்சிபி vs ராஜஸ்தான் போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்த தவறு ) ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததற்கு தினேஷ் கார்த்திக் தான் காரணமாக அமைந்தார்.
Story first published: Friday, May 27, 2022, 23:27 [IST]
Other articles published on May 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X