For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பட்லரின் வீக்னஸ் இதுதான்.. 2 பவுலர்களுக்கு ஆர்சிபி ஸ்பெஷல் பயிற்சி.. சரியாக நடந்தால் வெற்றி உறுதி!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜாஸ் பட்லரை நீக்க ஆர்சிபி பக்கா ப்ளானுடன் களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது எலிமினேட்டர் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடந்துகின்றன.

ஏற்கனவே குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்ட சூழலில், இன்று வெற்றி பெறும் அணியும் இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளது.

இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணிஇலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி

ஆர்சியின் திட்டம்

ஆர்சியின் திட்டம்

படு உற்சாகத்துடன் இருக்கும் ஆர்சிபி, ராஜஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு ஒரு விஷயத்தை செய்தாலே போதும். ராஜஸ்தான் அணியின் முக்கிய பலமே ஜாஸ் பட்லர் மட்டும் தான். ஓப்பனிங்கில் இவர் காட்டும் அதிரடியும், தரும் நம்பிக்கையும் தான் கடின ஸ்கோரை குவிக்க உதவுகிறது. இதுவரை 15 போட்டிகளில் 718 ரன்களை குவித்துள்ளார். எனவே இவரை முதல் 10 - 12 பந்துகளில் வீழ்த்தியாக வேண்டும்.

பட்லர் வீக்னஸ்

பட்லர் வீக்னஸ்

இதற்காக இவரின் வீக்னஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பவுலர்களையும் விளாசும் ஜாஸ் பட்லர், இன் ஸ்விங்கர் பந்துகளை பார்த்தால் மட்டும் திணறுவார். உள்ளே வரும் பந்தின் லெந்த்-ஐ அறிய முடியாததால், ஸ்டம்ப் அவுட் அல்லது எல்.பி.டபள்யூ அவுட்டாகிவிடுகிறார். அந்த பந்தை அடிக்க முயன்ற போதெல்லாம் பட்லர் அவுட்தான் ஆகியுள்ளார். எனவே போட்டியின் தொடக்கத்தில் பந்து நல்ல ஸ்விங் ஆகும். அப்போதே அவரை நீக்க வேண்டும்.

2 முக்கிய பவுலர்கள்

2 முக்கிய பவுலர்கள்

இதற்காக ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் மற்றும் ஜோஸ் ஹாசல்வுட் ஆகியோருக்கு ஸ்பெஷல் பயிற்சி தரப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டியில் நல்ல அனுபவம் உள்ள இவர்கள், நல்ல இன்ஸ்விங் வீசக்கூடியவர்கள். குறிப்பாக ஹாசல்வுட். எனவே இவர்களை பட்லருக்கு எதிராக தொடர்ந்து ஓவர்களை போடவிட்டு விக்கெட் எடுக்க டூப்ளசிஸ் திட்டமிட்டுள்ளார்.

ஃபார்ம் அவுட்டான பட்லர்

ஃபார்ம் அவுட்டான பட்லர்

ஜாஸ் பட்லரும் கடந்த சில போட்டிகளாக சரியான ஃபார்மில் இல்லை. தொடரின் தொடக்கத்தில் அதிரடி காட்டிய அவர், சமீப காலமாக முதலில் நிதானமாக தான் ஆடுகிறார். அதன்பின் விக்கெட்டை பறிகொடுக்கிறார். பட்லர் சொதப்பிய போதெல்லாம் ராஜஸ்தான் நிலைகுலைந்துள்ளது. எனவே இது சரியான திட்டமாக அமையும்.

Story first published: Friday, May 27, 2022, 17:39 [IST]
Other articles published on May 27, 2022
English summary
RCB vs RR : RCB gives a special training for 2 bowlers to use Jos buttler's weakness ahead of IPL qualifier 2 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X