For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கிற்கு மதுரையில் நிகழ்ந்த அதிசயம்..! இந்திய அணிக்கு திரும்பியதன் பின்னணி!!

மும்பை: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது 37 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் கடைசியாக விளையாடினார்.

அதன் பிறகு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், பாதி தொடருக்கு பிறகு நீக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியாவை மாற்றியது எது? தோனி அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ச்சியில் ஹர்திக்ஹர்திக் பாண்டியாவை மாற்றியது எது? தோனி அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ச்சியில் ஹர்திக்

கிரிக்கெட் வர்ணனையாளர்

கிரிக்கெட் வர்ணனையாளர்

இதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் இங்கிலாந்து சென்ற தினேஷ் கார்த்திக், அங்கு ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தியா வந்த கார்த்திக் தமிழக ரஞ்சி அணி, கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

Recommended Video

Dinesh Karthik கண்ட கனவு! Comeback கொடுத்ததில் Happy! | Aanee's Appeal | *Cricket
இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

ஆனால், அதன் பிறகு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக், அதில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஐபிஎல் தொடரில் அவர் 7வது இடத்தில் இறங்கி 16 போட்டியில் 330 ரன்களை விளாசினார். ஸ்ட்ரைக் ரேட் 183 ஆகும். இதன் மூலம் இந்திய அணியில் இடம் கிடைத்த கார்த்திக் தற்போது தவிர்க்க முடியாத வீரராக விளங்குகிறார்.

உள்ளூர் கிரிக்கெட்

உள்ளூர் கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக் எப்படி 7 மாதத்தில் இப்படி ஒரு அதிசியத்தை நிகழ்த்தினார் என்பது குறித்து ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சில உண்மைகளை கூறினார். தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் என்ற வெறி இருந்தது. கார்த்திக் ஐபிஎல் தொடரில் விளையாடாத சமயத்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில விளையாடி பயிற்சி மேற்கொண்டார்.

மதுரையில் அதிசயம்

மதுரையில் அதிசயம்

இதனைத் தொடர்ந்து மதுரைக்கு சென்ற தினேஷ் கார்த்திக், அங்கு நடந்த லோக்கல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அங்கு பல ஷாட்களை ஆடியும் இக்கட்டான கட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் போன்ற அனுபவங்களை கற்று கொண்டார். மதுரை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இது போன்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங் பயிற்சியின் போது, வலைகள் இன்றி, பெரிய ஷாட்களை ஆடி பயிற்சி செய்வார். இதனால் தான் கார்த்திக் தற்போது சிறந்து விளங்குகிறார் என்று சஞ்சய் பங்கர் கூறினார்.

Story first published: Saturday, June 18, 2022, 18:36 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
Reason behind Dinesh karthik brilliant batting performance தினேஷ் கார்த்திக்கிற்கு மதுரையில் நிகழ்ந்த அதிசயம்..! இந்திய அணிக்கு திரும்பியதன் பின்னணி!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X