சோதிச்சிட்டே இருக்காங்களே. நல்லா ஆடுனாலும் அந்த ஒரு விஷயம் பிரச்னை. ப்ரித்வி ஷாவை ஒதுக்கிய பிசிசிஐ

மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம் பெறாததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.

அதிர்ச்சியில் இந்திய வீரர்கள்.. இங்கிலாந்து தொடருக்கு பிசிசிஐயின் மெகா ப்ளான்.. இவ்ளோ கட்டுப்பாடா?

இதற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. அந்த பட்டியலில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம் பெறாதது பேசுப்பொருளாகியுள்ளது.

தொடர் சொதப்பல்

தொடர் சொதப்பல்

21 வயதாகும் இளம் வீரர்கள் கடந்த 2 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே போல தொடர் காயங்களால் தொடரில் நீடிக்க முடியாமல் போனது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், பிரித்வி ஷாவின் சொதப்பல் பயணம் தொடர்ந்தது. இதனால், இங்கிலாந்து தொடரின்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஃபார்முக்கு திரும்பினார்

ஃபார்முக்கு திரும்பினார்

எனினும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர் 800 ரன்களுக்கு மேல் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் 2021 தொடரிலும் டெல்லி அணிக்காக அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தார். 8 போட்டிகளில் ஆடிய அவர் 308 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரச்னை

பிரச்னை

ஆனால் அதுகுறித்து பிரித்வி ஷாவிற்கு தேர்வு குழுவில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில், இந்திய அணியில் இடம்பெறுவதற்கான சரியான உடல் தகுதியுடன் ஷா இல்லையென்றும், அணியில் இடம்பெறவேண்டும் என்றால் உடல் எடையை குறைக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பண்ட் உதாரணம்

பண்ட் உதாரணம்

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், பிரித்வி ஷா உடல் எடையை சற்றுக் குறைக்க முயற்சிக்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடரின் போது கூட ஃபீல்டிங்கில் அவருக்கு நிறைய பிரச்னைகள் இருந்தது. ரிஷப் பண்ட்-ம் இதே போன்று தான் முன்பு இருந்தார்.ஆனால் உடல் எடையை குறைத்து தற்போது சிறப்பாக ஆடி வருகிறார். எனவே பிரித்வி ஷாவுக்கு ரிஷப் பண்ட் தான் உதாரணம். பண்ட்-ஆல் முடியும் என்றால் பிரித்வி ஷாவாலும் முடியும் என பேசியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reason Behind Prithvi shaw not getting chance for England tour
Story first published: Saturday, May 8, 2021, 16:02 [IST]
Other articles published on May 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X