For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ருதுராஜுக்கு உள்ள கண்டம்.. கடைசி நேரத்தில் ரோகித் எடுத்த முடிவு.. இதெல்லாம் நியாயமே இல்லையே?

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட்-க்கு வாய்ப்பளித்து பெரும் திட்டம் தீட்டியுள்ளார் ரோகித் சர்மா.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஏற்கனவே 2 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் 3வது போட்டியிலும் வென்று வைட் வாஷ் செய்ய காத்துள்ளது.

 ப்ளேயிங் 11 சேர்ப்பு

ப்ளேயிங் 11 சேர்ப்பு

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ருதுராஜ் கெயிக்வாட் சேர்ப்பு, ஆவேஷ் கான் அறிமுகம் என சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயமே ருதுராஜ் தான். நியூசிலாந்து தொடர், தென்னாப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் என வெளியிலேயே உட்காரவைக்கப்பட்டிருந்த ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு இன்று தான் வாய்ப்பு தந்துள்ளனர்.

பின்னால் பெரும் திட்டம்

பின்னால் பெரும் திட்டம்

இந்நிலையில் இதிலும் பெரிய திட்டம் உள்ளதாக தெரிகிறது. அதாவது இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. அந்த தொடரில் கோலி இல்லை என்பதால் ருதுராஜுக்கு முழுவதுமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ரோகித் உள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் களமிறக்கினால், ஒரே ஒரு போட்டியை வைத்து திறமையை நிரூபித்துக்காட்ட செல்வார்கள் என முன்னாள் வீரர் எச்சரித்துள்ளனர்.

இஷானுக்கு ஆபத்து

இஷானுக்கு ஆபத்து

ஆனால் ரோகித் அதனையே தான் செய்துள்ளார். ஏனென்றால் இலங்கை தொடரில் சஞ்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்-ன் இடத்திற்கு அவரை சேர்த்துள்ளதால் அவர் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இருப்பார். இதனால் ரோகித் சர்மாவின் நம்பிக்கையை பெற்ற இஷான் கிஷானுக்கு இடம் கிடைப்பது சிரமமாகிவிடும். அதிலும் ருதுராஜ் வெளியே உட்காரவைக்கப்பட்டால் கடும் எதிர்ப்புகளை அவர் சந்திப்பார்.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

எனவே இன்று நடைபெறும் 3வது டி20 போட்டியில் கணக்கு காட்டும் படி ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டு, இலங்கை தொடர் முழுவதுமாக ருதுராஜை ஓரம்கட்டப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த போட்டியில் தன்னை ருதுராஜ் நிரூபித்துக்காட்டினால் மட்டுமே இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

Story first published: Sunday, February 20, 2022, 19:27 [IST]
Other articles published on Feb 20, 2022
English summary
Reason behind why ruturaj gaikwad in 3rd t20 against west indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X