அவ்வளவு எச்சரிக்கை வந்தது.. விடாப்படியாக இருந்த விராட்.. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ல் இந்திய அணி செய்த ஒரு தவறே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.

இந்த தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்காக கேப்டன் விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

 7 ஆண்டுகளாக.. ஒரு கோப்பை கூட இல்லை.. தொடரும் இந்திய அணியின் 7 ஆண்டுகளாக.. ஒரு கோப்பை கூட இல்லை.. தொடரும் இந்திய அணியின்

6வது நாள் ஆட்டம்

6வது நாள் ஆட்டம்

நேற்றைய போட்டியில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இந்திய அணி வலுவான நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்து வேகமாக விக்கெட்களை இழந்து தடுமாறியது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட விராட் கோலி, ரஹானே ஆகியோர் பெரும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி அசால்டாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை

முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை

இந்தியாவின் இந்த பெரும் சொதப்பலுக்கு விராட் கோலி போட்ட தவறான திட்டம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. நேற்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு எதுவும் இருக்காது என்பதால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வலுவான ஃபார்மில் இருந்தனர். எனவே அவர்களை வெல்வதை முதல் நோக்கமாக வைக்காமல் போட்டியை சமன் செய்ய முதலில் நிதனமாக செயல்பட வேண்டும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் போட்டியில் மீண்டு வருவது கடினம் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறியிருந்தனர்.

 கோலி போட்ட திட்டம்

கோலி போட்ட திட்டம்

ஆனால் இதனை எதனையுமே கண்டுக்கொள்ளாத விராட் கோலி முற்றிலும் மாறுபட்ட திட்டத்தை போட்டார். அதாவது தொடக்கம் முதலே அனைத்து பேட்ஸ்மேன்களும் பேட்டை சுழற்றி ரன்களை வேகமாக உயர்த்த வேண்டும். அதன் பின்னர் நியூசிலாந்து அணியை சுலபமாக வென்று விடலாம் என கணக்குபோட்டுள்ளார். இதற்கு அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, ரஹானே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் விராட் கோலி தனது முடிவில் தீவிரமாக இருந்துள்ளார்.

சொதப்பிய ப்ளான்

சொதப்பிய ப்ளான்

கோலியின் திட்டப்படி அதிரடி காட்ட முயன்ற இந்திய வீரர்களில் ரிஷப் பண்ட் மட்டுமே வெற்றி கண்டார். மற்ற அனைவரும் நியூசிலாந்தின் வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர். இதன் காரணமாக இந்திய அணியால் 138 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயிக்க முடிந்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி சிறிய இலக்கை எளிமையாக எட்டிப்பிடித்தது. கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். கோலியின் இந்த தவறால் ஆட்டத்தை டிரா செய்யக்கூட முடியவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
What is the Mistake Team India did in WTC Final Reserve day match against Newzealand
Story first published: Thursday, June 24, 2021, 10:24 [IST]
Other articles published on Jun 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X