For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினால் இப்படி ஒரு பலன் உள்ளதா?..நியூ, பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை.. மிரட்டும் புள்ளி விவரங்கள்!

சவுத்தாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.

ஐயோ பாவம்.. அறிமுக போட்டியே இன்னும் முடியல.. அதுக்குள்ள 7 மாசம் சஸ்பெண்ட்..இங்கிலாந்து வீரரின் நிலை ஐயோ பாவம்.. அறிமுக போட்டியே இன்னும் முடியல.. அதுக்குள்ள 7 மாசம் சஸ்பெண்ட்..இங்கிலாந்து வீரரின் நிலை

இதற்காக அணி கணிப்புகள், பிட்ச்கள், வானிலை விவரங்கள் ஆகியவை தற்போது இருந்தே கணிக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து களம்

இங்கிலாந்து களம்

இங்கிலாந்து பிட்ச்சானது இந்திய களம் போன்று இல்லாமல் வேகப்பந்துவீச்சு சாதகமான ஒன்றாகும். இங்கு பந்தில் நல்ல வேகமும், ஸ்விங்கும் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் - பேட்ஸ்மேனுக்கு இடையே கடும் போர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டிப்பாக சேர்க்கப்பட்டே ஆக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

முக்கிய குற்றச்சாட்டு

முக்கிய குற்றச்சாட்டு

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய பிட்ச்-களில் மட்டும் தான் சிறப்பாக செயல்படுகிறார். SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்த நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

ஆனால் இங்கிலாந்து களத்தில் அஸ்வின் கண்டிப்பாக தேவைப்படுவார். அதற்கு காரணம் அவரின் அனுபவம். இடதுகை வீரர்களுக்கு எதிராக அவர் படைத்திருக்கும் சாதனைகள் நியூசிலாந்து அணியை திணறடிக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை வைத்து பார்க்கும் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். எனவே அஸ்வினின் விக்கெட் பசிக்கு இவர்கள் தீனி போடுவார்கள்.

இடதுகை பேட்ஸ்மேன்கள்

இடதுகை பேட்ஸ்மேன்கள்

உலகில் இதுவரை இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனையே பின் தள்ளி முதலிடத்தில் உள்ளார் அஸ்வின். அவர் இதுவரை எடுத்துள்ள 409 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்களில் 207 விக்கெட்கள் இடது கை வீரர்களது ஆகும். அதே போல பேட்டிங் ஆர்டரில் டாப் 3 வீரர்களை விக்கெட் எடுப்பதில் அஸ்வின் கில்லாடி ஆவர். டாப் 3 வீரர்களில் மட்டும் இதுவரை 81 விக்கெட்களை எடுத்துள்ளார். அதுவும் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 52.2 ஆகும். அதன்படி பார்த்தால் நியூசிலாந்து அணியில் நியூசிலாந்து அணி ஓப்பனர்கள் டேவன் கான்வாய், டாம் லாந்தம் ஆகிய இருவருமே இடது கை வீரர்கள் தான்.

அந்த 2 வீரர்கள்

அந்த 2 வீரர்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் 11ல் இடம் பெற்றால் நியூசிலாந்து அணியின் கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் அச்சுறுத்தல்களை சமாளிக்கலாம். இதுவரை கேன் ரிச்சர்ட்ஸனுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அஸ்வின் 4 முறை விக்கெட் எடுத்துள்ளார். அதே போல ராஸ் டெய்லரை 3 முறை விக்கெட் எடுத்துள்ளார். இவற்றையெல்லாம் கண்டிப்பாக விராட் கோலி யோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,

Story first published: Tuesday, June 8, 2021, 20:16 [IST]
Other articles published on Jun 8, 2021
English summary
Reason Behind that Ashwin is India's biggest weapon against New Zealand in WTC Final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X