For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் ரீ-என்ட்ரி.. தொடங்குகிறதா இந்திய அணி "Recycling" பிராசஸ்? - கோலி விலகல் பின்னணி

மும்பை: கடந்த 24 மணி நேரமாக, இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலும் பரபரப்பான செய்தி என்பது, விராட் கோலி டி20 கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவது குறித்த செய்தி தான்.

reason behind virat kohli likely to resign as indian team t20 captain

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப்பில் இருந்து உலகக் கோப்பை தொடருக்கு பிறகு விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்ததை உலகறியும். காரணம், அளவுக்கதிகமான ஒர்க் லோட்.

சரி.. அடுத்த கேப்டன்? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர், சக்ஸஸ் ரேட் அதிகம் வைத்திருக்கும் கேப்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என SENA நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய ஒரே இந்திய கேப்டன். இந்த அத்தனை பெயர்களுக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. ஆனால், இவர் வசம் உள்ள ஒரே மைனஸ்.. ஓஹோ மைனஸ்.. இதுவரை முக்கியமான ஐசிசி டிராஃபிகளை வெல்லாத கேப்டன். பிசிசிஐ அறையில், கோலி வென்றுக் கொடுத்த ஐசிசி கோப்பைகளை நீங்கள் தேட வேண்டியிருக்கும். என்ன தான் அவர் Aggressive Captain, World Class Batsman, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 50+ ஆவரேஜ் ஹோல்டர் என்று சொன்னாலும், "கப் எங்க பிகிலு?" என்பதே பிரதானமாக முன்வைக்கப்படும் கேள்வி. இதற்கு தெரிந்தோ, தெரியாமலோ கோலியிடமும் பதில் இல்லை.

இப்போது உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். உண்மையில் தன் தலையில் தூக்கி வைத்திருந்த சுமையை இறக்கிவைத்துவிட்டார். இனி கோலி ஸேஃப். ஆனால், 'கதை இனி தான் ஆரம்பம்' என்பது போல, பிரச்சனை இனி தான் தொடங்கவிருக்கிறது. அதுவும் வெவ்வேறு வடிவத்தில் வெடிக்க இருக்கிறது. "நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்". எப்படி-ன்னு கேட்குறீங்களா? சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒன்று சொல்கிறேன். எது எல்லாமே யூகத்தின் அடிப்படையில் தான் நான் சொல்கிறேன். பிடிச்சவங்க ஏத்துக்கோங்க. பிடிக்காதவங்க விட்டுடுங்க. ஸோ சிம்பிள்!.

அடுத்த துணைக்கேப்டன் யார்?.. பதவிக்காக மோதிக்கொள்ளும் 3 வீரர்கள்.. குழப்பத்தில் பிசிசிஐ! அடுத்த துணைக்கேப்டன் யார்?.. பதவிக்காக மோதிக்கொள்ளும் 3 வீரர்கள்.. குழப்பத்தில் பிசிசிஐ!

| சரி.. இப்போ பிரச்சனை எங்கிருந்து தொடங்கும் என்று பார்க்கலாம். உண்மையில், வரும் டி20 உலகக் கோப்பையை இந்தியா ஜெயிக்கா விட்டால், அணிக்குள் எந்த குழப்பமும் இருக்காது.

| ஒருவேளை, விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணி கோப்பையை வென்றுவிட்டால், அப்போது தான் "கச்சேரி" தொடங்கவிருக்கிறது. விராட் கோலியால் அல்ல.. மகேந்திர சிங் தோனியால்...!

| என்ன குழப்பமாக இருக்கிறதா? யெஸ்.. உங்களை சற்று குழப்பத் தான் போகிறேன். முடிந்தால் கட்டுரையை படிக்கும் முன்பு சற்று தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், விராட் கோலி கேப்டன் என்றாலும், அணியின் ஆலோசகராக சைலண்ட்டாக உள்ளே நுழைந்திருப்பவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியில், ஒரு காலத்தில் பேராதிக்கம் நிகழ்த்தியவர். அணிக்குள் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். கோப்பைகளின்றி வறண்டு காய்ந்து போயிருந்த பிசிசிஐ அறைகளை கோப்பைகளால் அலங்கரித்தவர். டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று இவர் அடுக்கிய கோப்பைகள் ஏராளம். இந்த ஏராளத்தில் ஜம்மென்று ஐபிஎல் கோப்பைகளும் வந்து அமர்ந்து கொள்ளும். மூன்று முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2020 சீசன் தவிர்த்து, விளையாடிய அனைத்து தொடர்களிலும், பிளே ஆஃப் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கூட்டிச் சென்றவர். இந்தியாவில் எந்தவொரு கேப்டனும், இவரது ஆளுமைக்கு நிகராக வந்துவிட முடியாது. (தோனி ஹேட்டர்ஸ் அப்படி ஓரமாக சென்று சண்டை போடலாம்).

Recommended Video

Dhoniயின் வெறித்தனமான Net Practice Session | IPL 2021 | CSK | OneIndia Tamil

அப்படிப்பட்ட ஆளுமை வாய்ந்த தோனியைத் தான் தெரிந்தோ, தெரியாமலோ அல்ல.. தெரிந்தே.. எதிர்காலத்தை Calculate செய்தே அணிக்குள் கூட்டி வந்திருக்கிறார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. விராட் கோலி அக்ரரெஷன் கேப்டன் என்றால், அவர் படித்த ஸ்கூலின் ஹெட்மாஸ்டர் கேப்டன் கங்குலி. "ஆக்ரோஷத்தின் சக்கரவர்த்தி". விராட் கோலி தனது முடிவில் விடாப்பிடியாய் இருந்தால், சவுரவ் கங்குலி தனது முடிவில் அசுரத்தனமாக இருப்பவர். பின்ன சும்மாவா.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழத்துடன் இணைந்து மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். "தீதி" மமதா பானர்ஜி மீண்டும் அங்கு முதல்வராகிவிட்டார். ஆனால், அந்த வங்கத்து சிங்கத்தை எதிர்க்க, இந்த வங்கத்து புலியை அணுகியது பாஜக. ஆனால், கங்குலி துளியும் அசைந்து கொடுக்கவில்லை. அமித் ஷா, பிரதமர் மோடி எவ்வளவோ முயன்றும் நாசூக்காக அந்த கோரிக்கைகளில் இருந்து தப்பித்தார். (தேர்தல் சமயத்தில் அவ்வப்போது கங்குலி மருத்துவமனைகளில் நெஞ்சு வலி காரணமாக அட்மிட் ஆனதை இந்த விஷயத்தோடு நீங்கள் கம்பேர் செய்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!)

அப்படி பாஜகவுக்கே தண்ணீர் காட்டிய கங்குலி, இந்த "பிஸ்கோத்" கிரிக்கெட் விவகாரங்களில் எப்படிப்பட்ட அழுத்தக்காரராக இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். சரி.. அவர் என்ன அழுத்தம் திருத்தமாக இருக்கிறார்? வெரி சிம்பிள்.. "இந்திய அணி 2013க்கு பிறகு எந்த ஐசிசி டிராஃபிகளையும் வெல்லவில்லை" என்பதே அழுத்தக்காரர் கங்குலி முன்வைக்கும் பாயிண்ட். தான் இப்போது பிசிசிஐ தலைவராக இருப்பதால், தனது பதவிக் காலத்திற்குள் இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருக்கிறார். அதன் வெளிப்பாடே, அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தும், அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தும், அணியின் பவுலிங், ஃபீல்டிங் கோச்கள் இருந்தும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வாண்ட்டடாக அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார் சவுரவ் கங்குலி என்று உறுதியாக கூறலாம்.

ஆனால், வெளியில் சொல்லும் காரணம் என்னவெனில், "ரவி சாஸ்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவரால் அக்டோபரில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் தீவிரமாக செயலாற்ற முடியுமா என்று தெரியவில்லை.. அதன் காரணமாகவே ஒரு சப்போர்ட்டுக்காக தோனியை உள்ளே கொண்டு வந்திருக்கலாம்" என்பதே. ஆனால், இங்கு கதையே வேறு. கங்குலியின் தேவை, தனது பீரியடில் ஒரு கப். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்ல ரெடி. கங்குலியின் அதிர்ஷ்டமே, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இதே அலைவரிசையில் இருந்தே. அப்படி இருந்தது தானே ஆகவேண்டும். ஏனெனில், "ஜெய் ஷா செயலாளராக இருந்து, இந்திய அணி என்ன சாதித்தது?" என்பது தான் ஃபைனல் கேள்வி. ஸோ, அவர் கங்குலியின் அலைவரிசையில் இருந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. விராட் கோலி இது இன்றோ, நேற்றோ எடுத்த முடிவல்ல. இதுகுறித்து பல மாதங்களாக கோலியிடம் பிசிசிஐ சார்பில் விவாதிக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஐபிஎல் தொடரிலும் கோப்பைகளை வெல்ல முடியாத கோலி, இனி டி20 அணியில் ஒரு வீரராக கன்டினியூ செய்வதையே பிசிசிஐ விரும்பியதாகவும் தெரிகிறது.

சரி.. இதுக்கும், டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால் பிரச்சனை ஏற்படுவதற்கும் என்ன சம்பந்தம்? இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வென்றால், கோலி கேப்டன்ஷிப்பில் இந்திய அணி ஜெயித்துவிட்டது என்று சொல்வார்களா? அல்லது ரவி சாஸ்திரி பயிற்சி அளித்ததால் இந்திய அணி ஜெயித்துவிட்டது என்பார்களா? ஆங்! நீங்களே சொல்லிட்டீங்க பாருங்க. "தோனி ஆலோசகராக இருந்ததால் தான் இந்தியா ஜெயித்தது" என்று கண்களை மூடிக் கொண்டு ரசிகர்களும் சொல்வார்கள், மீடியாக்களும் அதை பிரதிபலிக்கும். அதை ரவி சாஸ்திரியும், கோலியும் ஒப்புக் கொள்வார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இடத்தில் தான் இந்திய கிரிக்கெட்டில், மகேந்திர சிங் தோனியின் "இரண்டாம் இன்னிங்ஸ்" தொடங்கவிருக்கிறது. தோனி - சாப்டர் 2.

யெஸ்.. உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால், ஆட்டோமேட்டிக்காக தோனியின் செல்வாக்கு, ஆளுமை மீண்டும் அணியில் தலைதூக்கும். கோலி தான் சொன்னபடி பதவி விலகிய பிறகு, அணியில் அடுத்த கேப்டன் யார் என்பதை கூட, தோனி முடிவு செய்யும், அல்லது நிர்ணயிக்கும், அல்லது சஜ்ஜஸ்ட் செய்யும் இடத்திற்கு வரலாம். அப்போது தான் சிக்கல் தொடங்கும். ரோஹித் ஷர்மாவின் வயது இப்போது 34. தோனியைப் பொறுத்தவரை வயது என்பது செகண்ட்ரி தான். ஆனால், ஃபிட்னஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். இதே கங்குலி, ஷேவாக்.. ஏன் சச்சின் போன்றோரை கூட "ஃபீல்டங்கில் சுறுசுறுப்பு இல்லை.. அணிக்கு இவர்கள் பாரம்" என்று சொல்லி 15, 16 வருடங்களுக்கு முன்பே பிசிசிஐ அதிகாரிகளை அலற வைத்தவர் தோனி.

அப்படிப்பட்ட தோனி, வெயிட் போட்டு கொழு கொழுவென ஏறிக் கிடக்கும் 34 வயது ரோஹித்தை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக பரிந்துரைக்க நூற்றுக்கு 200 சதவிகிதம் இல்லை. அப்படியெனில், அடுத்த டி20 கேப்டனாக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற பெரும் கேள்வி எழும். அதற்கு பதில் தோனி இப்படியும் கொடுக்கலாம்.. "லோகேஷ் ராகுல்" என்று. ஒருவேளை தோனி அப்படி ராகுல் பெயரை பரிந்துரைக்கும் பட்சத்தில், பல வருட கேப்டன் கனவில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு அது தாங்கிக் கொள்ள முடியாத, அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமையலாம். அது அவரை ஓய்வு அறிவிக்கும் முடிவைக் கூட எடுக்கத் தூண்டலாம். ஏனெனில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை "ராஜா" போன்று பார்த்துக் கொள்கிறது. தவிர, உடம்பும் வெயிட் போட்டிருக்க, ரோஹித் அந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டால் அதில் ஆச்சர்யம் கொள்ள எதுவுமில்லை. ஸோ, என்னளவில் அணியில் தோனியின் ரீ-என்ட்ரி என்பது, மீண்டும் இந்திய அணியை Re-cycling செய்யும் நிலைக்கு கொண்டுச் செல்லும் என்பேன். இந்த கற்பனை கதை பொய்யாக வாய்ப்புள்ளது. நிஜமாக அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, September 17, 2021, 18:29 [IST]
Other articles published on Sep 17, 2021
English summary
reason behind kohli to resign as t20 captain - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X