For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த சிறிய மாற்றம் தான் தோனியின் அதிரடி ரன் குவிப்புக்கு காரணம்.. என்ன அது?

மும்பை : தோனி இந்த ஆண்டு பேட்டிங்கில் கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு அவரது பேட்டிங் மோசமாக இருந்த நிலையில், இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என தெரிய வந்துள்ளது.

தோனி அவரது பேட்டில் செய்த ஒரு சிறு மாற்றம், அவரது ஒட்டு மொத்த பேட்டிங்கிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

வலியை சொல்ல வார்த்தைகள் போதாது.. தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் வலியை சொல்ல வார்த்தைகள் போதாது.. தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

தோனி பேட்டின் மாற்றம்

தோனி பேட்டின் மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் தோனியும், ரிஷப் பண்ட்டும் பேட்டிங் செய்த போது இருவரது பேட்டும் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. தோனி பேட்டின் கீழ் பகுதி உருண்டு இருந்தது.

சிறு மாற்றங்கள் செய்தார்

சிறு மாற்றங்கள் செய்தார்

இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், தோனி தனது பேட்டில், தான் அதிகம் அடித்து ஆடும் இடங்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் குறி வைக்கும் இடங்களில் உள்ள பகுதிகளில் சிறு மாற்றங்கள் செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

பேட்டில் அதிக எடை

பேட்டில் அதிக எடை

பேட்டின் பின் பகுதி மற்றும் அடிப் பகுதியில் அதிக எடை இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் அதிக எடை இருப்பதால் பந்தை தூக்கி அடித்து ஆடவும், அதிக சக்தியை செலுத்தவும் அது உதவும் என கூறப்படுகிறது. தற்போது பேட்டின் எடை 1150 கிராம் ஆக இருக்கிறது.

தொடர்ந்து மூன்று அரைசதம்

தொடர்ந்து மூன்று அரைசதம்

தோனி இந்த மாற்றத்தை ஆசிய கோப்பை தொடரிலேயே செய்துள்ளார். எனினும், அதன் பலன் அப்போது தெரியவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் தான் தோனி தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து தன் பேட்டிங் பார்மை மீட்டார்.

அதிக ரன் - சராசரி

அதிக ரன் - சராசரி

கடந்த 2018இல் தோனி 13 இன்னிங்க்ஸ்களில் 275 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இது வரை 6 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் 242 ரன்கள் அடித்துள்ளார். இதன் சராசரி 121 ஆகும்.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

கடந்த ஆண்டு மோசமான பார்ம் காரணமாக தோனி உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படுவாரா? என்ற சந்தேகம் கூட இருந்தது. எனினும், இந்த சிறு மாற்றம் தோனியின் பேட்டிங் திறனை உயர்த்தி அவர் இல்லாமல் இந்தியா உலகக்கோப்பை செல்லாது என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

Story first published: Friday, February 15, 2019, 17:12 [IST]
Other articles published on Feb 15, 2019
English summary
Reason for Dhoni’s recent batting form is revealed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X