For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஆடுகளத்தில் பெரிய அளவில் புற்கள் இல்லை என்றாலும், டாஸ் வென்ற இங்கிலாந்து ஏன் முதலில் பந்துவீசியது என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தாலும், அங்கு ரன்னும குவிக்க முடியும்.

இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 5வது டெஸ்டில் சீனியருக்கு ஏமாற்றம்!! இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 5வது டெஸ்டில் சீனியருக்கு ஏமாற்றம்!!

பிட்ச் தன்மை

பிட்ச் தன்மை

குறிப்பாக, இங்கிலாந்தை பொறுத்த வரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படுகிறதா என்பதை தீர்மானிப்பது வானிலை தான். சூரியன் சுட்டென்று அடித்தால், ஆடுகளத்தில் பந்த அவ்வளவாக ஸ்விங் ஆகாது. அதுவே வானம் மேகமூட்டத்துடன் இருந்தால், பந்து நன்றாக ஸ்விங் ஆகி பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும்.

எளிதானது இல்லை

எளிதானது இல்லை

இதே போன்று டெஸ்ட் போட்டியில் கடைசி 2 நாட்களில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதே சமயம், ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் ஸ்விங்கும் ஆகவில்லை. பவுன்சும் ஆக வில்லை. ஆனாலும், இங்கிலாந்து. ஏன் இந்த முடிவை எடுத்தது என்று உங்களுக்கு ஆச்சரியம் இருந்திருக்கலாம்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

அதற்கு காரணம் நியூசிலாந்து தொடர் தான். நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியில் அனைத்திலும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பந்துவீச்சை தான் தேர்வு செய்தது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் முதல் 3 இன்னிங்சிலும் இரு அணிகளுக்கும் சாதகமாக மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் கடைசி இன்னிங்சில், இங்கிலாந்து அணி தனது பேட்டிங் மூலம் வெற்றியை பெற்றது.

4வது இன்னிங்சில் ஆதிக்கம்

4வது இன்னிங்சில் ஆதிக்கம்

குறிப்பாக பாரிஸ்டோ, ஜோ ரூட் போன்றோர் 4வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்தனர். கடைசி 3 போட்டியிலும் முதலில் பந்துவீசியதால் வெற்றி கிடைத்தது. இதனால் தான் இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராகவும் பந்துவீசியது. இந்தியா கடைசி இன்னிங்சில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்றால், அது ஜடேஜா போன்ற சுழற்பந்துவீச்சாளரை நம்பியே உள்ளது.

Story first published: Friday, July 1, 2022, 16:27 [IST]
Other articles published on Jul 1, 2022
English summary
Reason for England choosing to bowl in Edgbaston test இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X