For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் பதவி விலக காரணம் என்ன? கோலி சந்தித்த அதே பிரச்சினை.. ஜோ ரூட் உருக்கமான அறிக்கை

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் 1 கேப்டன் என்ற பெருமையுடன் வலம் வந்த ஜோ ரூட் , தற்போது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Joe Root steps down as England Test captain | OneIndia Tamil

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக 5 ஆண்டுகள் செயல்பட்ட ஜோ ரூட், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக அதிக போட்டிகள், அதிக வெற்றிகள், அதிக ரன்கள் என்று பல்வேறு சாதனையை படைத்தார்.

ஒரு இடத்திற்கு 3 பேர் மோதல்.. ஆர்சிபிக்கு எதிராக பக்கா ப்ளான்.. சிஎஸ்கே களமிறக்கும் ப்ளேயிங் 11 இதோ!ஒரு இடத்திற்கு 3 பேர் மோதல்.. ஆர்சிபிக்கு எதிராக பக்கா ப்ளான்.. சிஎஸ்கே களமிறக்கும் ப்ளேயிங் 11 இதோ!

ஆனால் இங்கிலாந்தின் மான பிரச்சினையாக கருதப்படும், ஆஷஸ் கோப்பையை ஜோ ரூட் கோட்டைவிட்டதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

சவாலான முடிவு

சவாலான முடிவு

இந்த நிலையில், தமது பதவி விலகுவதற்கான காரணம் குறித்து ஜோ ரூட் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து வந்த பிறகு யோசித்தேன். பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக முடிவு எடுத்தேன். என் வாழ்நாளில் நான் எடுத்த மிகவும் சவலான முடிவு இது. என் நண்பர்கள், குடுமப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான் இது.

மிகவும் பாதிக்கப்பட்டேன்

மிகவும் பாதிக்கப்பட்டேன்

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட 5 ஆண்டுகளை நினைத்து பெருமைப்படுகிறேன். கர்வம் கொள்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் உச்சம் தொட்ட இந்த காலக் கட்டத்தில் நான் கேப்டனாக இருந்தது உள்ளபடியே மகிழ்ச்சி. எனினும் கேப்டன் பதவியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய பேட்டிங்கும் கொஞ்சம் பாதிக்கப்பட்டதை உணர்கிறேன்.

புதிய கேப்டனுக்கு ஆதரவு

புதிய கேப்டனுக்கு ஆதரவு

புதிய கேப்டனுக்கு நான் எப்போதும் போல் உறுதுணையாக இருப்பேன். இனி ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு பல வெற்றிகளை பெற்று தர முயற்சி செய்வேன். எனக்கு ஆதரவு அளித்த என்னுடைய பயிற்சியாளர்கள், சக வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த நிலையில், விராட் கோலிக்கு கேப்டன் பதவியிலிருந்து விலக எப்படி அழுத்தம் தரப்பட்டதோ, அதோ போன்ற ஒரு நெருக்கடியை சந்தித்தார் ஜோ ரூட். ஜோ ரூட்டுக்கு ஒரு படி மேல் சென்று சக வீரர்களே ஜோ ரூட்டை மதிக்காமல், ஒத்துழைப்பு தராமல் இருந்தனர். இதற்கு காரணம் ஜோ ரூட்டின் செய்தியாளர் சந்திப்பு தான் காரணம். அப்போதும் கூட ஜோ ரூட் பிடிவாதமாக இருந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே ஜோ ரூட்டுக்கு மறைமுக அழுத்தம் தந்தது குறிப்பிடத்தக்கது

Story first published: Friday, April 15, 2022, 17:13 [IST]
Other articles published on Apr 15, 2022
English summary
Reason for Joe root steps down from captaincy and his statement கேப்டன் பதவி விலக காரணம் என்ன? கோலி சந்தித்த அதே பிரச்சினை.. ஜோ ரூட் உருக்கமான அறிக்கை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X