For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க ஆடுறதை பார்த்தா சாம்பியன் டீம் மாதிரியா இருக்கு? சீக்கிரம் ஹிட்மேனை கூட்டிட்டு வாங்க!

Recommended Video

ராகுலுக்கு முதலில் வாய்ப்பு கொடுப்பார் கோலி.. அப்புறம் தான் ரோஹித்!

மும்பை : இந்திய அணியின் துவக்க வீரர்களின் கடந்த கால செயல்பாடு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக சேர்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு முதல் நிரந்தர துவக்க வீரர்கள் இல்லாத நிலை உள்ளது. வீரர்களை மாற்றி, மாற்றி ஆட வைத்து வருகிறார் கேப்டன் கோலி. அணியும் அதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 ஆஷஸ் வெற்றிக்கு அவர் மட்டும் காரணம்னு ஏன் பாராட்டுறீங்க..? இந்த லிஸ்டை பாருங்க.. உங்களுக்கே தெரியும் ஆஷஸ் வெற்றிக்கு அவர் மட்டும் காரணம்னு ஏன் பாராட்டுறீங்க..? இந்த லிஸ்டை பாருங்க.. உங்களுக்கே தெரியும்

துவக்கம் கவலை

துவக்கம் கவலை

இந்திய டெஸ்ட் அணியின் துவக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மோசமான நிலையில் தான் உள்ளது. துவக்க வீரர்கள் தனித் தனியாக ரன் குவித்தாலும் கூட பார்டன்ர்ஷிப் அமைக்க தவறி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 இன்னிங்க்ஸ்களில் ஒரு முறை மட்டுமே துவக்க வீரர்கள் 100 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து இருக்கின்றனர்.

சாம்பியன் அணியா?

சாம்பியன் அணியா?

கடந்த 10 இன்னிங்க்ஸ்களில் ஒரு முறை கூட 50 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டெஸ்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நிலையில், இது தான் சாம்பியன் அணியின் துவக்க வீரர்கள் நிலை.

முரளி விஜய், தவான் நீக்கம்

முரளி விஜய், தவான் நீக்கம்

முன்னதாக துவக்க வீரர்களாக சில காலம் இருந்த ஷிகர் தவான் - முரளி விஜய் ஜோடி சரியாக ரன் குவிக்கவில்லை என அவர்களை நீக்கினார் கோலி. முரளி விஜய்க்கு மீண்டும் சில வாய்ப்பாவது கிடைத்தது. தவானுக்கு அதுவும் இல்லை.

ப்ரித்வி ஷா காயம், தடை

ப்ரித்வி ஷா காயம், தடை

அடுத்து 18 வயதே ஆன இளம் வீரர் ப்ரித்வி ஷா அணியில் இடம் பெற்றார். அவர் தன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்தார். எனினும், அதன் பின் காயம் மற்றும் ஊக்கமருந்து விவகார தடை என அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார்.

மாயங்க் அகர்வால் நம்பிக்கை

மாயங்க் அகர்வால் நம்பிக்கை

மற்றொரு புதிய வீரர் மாயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடினாலும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மோசமாக சொதப்பி உள்ளார். அந்த தொடரின் 4 இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்த அவரின் சராசரி 20 மட்டுமே.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

ப்ரித்வி ஷா இல்லாத நிலையில் அணியில் வாய்ப்பு பெற்ற ராகுல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் மோசமாக சொதப்பி இருக்கிறார். தவறான ஷாட்கள் ஆடி தன் விக்கெட்டை பறிகொடுத்து வந்தார்.

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

இதற்கு தீர்வு என்ன? முன்னாள் வீரர்கள் கங்குலி, கௌதம் கம்பீர், அனில் கும்ப்ளே போன்றோர் ராகுல் சரியாக ஆடாத நிலையில், அவரை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க வேண்டும் என கூறி உள்ளனர்.

ரோஹித் சர்மா நல்ல பார்ம்

ரோஹித் சர்மா நல்ல பார்ம்

ரோஹித் உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார். அதே பார்மை அவர் டெஸ்ட் அணியிலும் எடுத்து வருவார் என பலரும் கருதினர். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவர் பெயர் இடம் பெற்ற போது அவர் அணியில் ஆடுவார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை கேப்டன் கோலி. அது பெரும் ஏமாற்றமாக இருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் வீரராக பார்க்கப்படும் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக களமிறக்கினால் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில்..

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில்..

இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா? ராகுலை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Story first published: Wednesday, September 11, 2019, 12:08 [IST]
Other articles published on Sep 11, 2019
English summary
Rasons for why Rohit Sharma should open in test matches for India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X