For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல வாய்ப்பு.. இதனால் தான் பிசிசிஐ வாய்திறக்கவில்லை.. அதிகாரி தகவல்

இங்கிலாந்து தொடருக்கு கூடுதலாக இரண்டு வீரர்கள் வேண்டும் என்று எழுந்த சர்ச்சைக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்.14ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்காக இந்திய அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கோலியின் கோரிக்கை

கோலியின் கோரிக்கை

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகிவிட்டார். அவருக்கு மாற்று வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், அபிமன்யூ ஈஸ்வரன் போன்றவர்கள் அங்கு இருப்பதால் எந்த பிரச்னையும் இருக்காது எனக் கருதப்பட்டது. ஆனால் கேப்டன் கோலி மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோர், ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்புமாறும் கோரிக்கை வைத்தனர்.

 நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

ஏற்கனவே 3 வீரர்கள் இருக்கும் போது எதற்காக கூடுதல் வீரர்களை கேட்கிறீர்கள் என அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சனங்களை அடுக்கினர். ஆனால் பிசிசிஐ இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ பதிலையும் அனுப்பாமல் இருந்தது. இதனால் இலங்கை தொடரில் இருக்கும் பிரித்வி ஷா மற்றும் படிக்கல் இங்கிலாந்துக்கு மாற்றப்படுகிறார்களா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

திட்டவட்டம்

திட்டவட்டம்

இந்நிலையில் தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி, எந்த வீரரையும் தற்போதைக்கு இங்கிலாந்துக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டோம். பிரித்விஷா, படிக்கல் ஆகியோர் முழுமையாக இலங்கை தொடரில் பங்கேற்பார்கள். ஜூலை 26ம் தேதி வரை அவர்கள் அங்கிருந்து தொடரை முடித்துக் கொடுப்பார்கள். அதன் பிறகு வேண்டுமானாலும் இங்கிலாந்து தொடர் குறித்து முடிவெடுக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.

Recommended Video

நிதி சிக்கல்.. வீரர்களிடம் கோரிக்கை வைத்த Srilanka Cricket Board தலைவர்..Ind vs Sl தொடர் தான் வழி
இருவருக்கு வாய்ப்பு

இருவருக்கு வாய்ப்பு

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதியன்று தான் தொடங்குகிறது. எனவே பிரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகியோர் ஜூலை 26 வரை இலங்கையில் விளையாடிவிட்டு பின்னர் அதே பபுளில் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களும் இங்கிலாந்து களத்தில் சிறப்பாக விளையாடுவார்களா என்பது சந்தேகமே.

Story first published: Thursday, July 8, 2021, 13:14 [IST]
Other articles published on Jul 8, 2021
English summary
Report says Prithvi Shaw, Devdutt Padikkal to fly england after Sri Lanka series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X