For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் இணையும் சச்சின் டெண்டுல்கர்.. புதிய பதவி என்ன தெரியுமா? பிசிசிஐ எடுத்த பெரும் முயற்சி

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் விரைவில் இந்திய அணியில் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Recommended Video

Indian Teamல் Sachin Tendulkar? BCCI கொடுக்க போகும் பதவி | OneIndia Tamil

இந்திய அணி தற்போது 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகரமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

அவர்களுக்கு மேலும் பலத்தை கூட்ட தான் இந்திய அணியின் ஜாம்பவான்களை பயிற்சியாளர்களாக நியமித்து வருகிறது பிசிசிஐ.

இந்திய அணியில் ஜாம்பவான்கள்

இந்திய அணியில் ஜாம்பவான்கள்

ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க

பிசிசிஐ செயல் தலைவரான ஜெய் ஷா பெரும் முயற்சிகளை எடுத்திருந்தார். முதலில் டிராவிட் அதற்கு மறுத்த நிலையில் பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தார். இதே போல கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விவிஎஸ் லக்‌ஷ்மணிடமும் பெரும் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்புக்கொள்ள வைத்தார்.

சச்சினுக்கு வலை

சச்சினுக்கு வலை

இந்நிலையில் ஜெய் ஷா அடுத்ததாக சச்சின் டெண்டுல்கரை அனுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 16 வயதில் இந்திய அணிக்கு அறிமுகமாக உலக நாடுகளே கொண்டாடும் அளவிற்கு திகழ்பவர் சச்சின். இவர் சர்வதேச அளவில் 34,000 ரன்களுக்கும் மேல் விளாசியுள்ளார். இவரை இந்திய அணியின் ஏதேனும் ஒரு உயர் பதவிக்கு நியமிக்க ஜெய் ஷா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பதவி என்ன

பதவி என்ன

இந்திய அணியில் தற்போது தலைமை பயிற்சியாளர், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்து துறைகளுக்கும் தனித் தனியாக பயிற்சியாளர்கள் உள்ளனர். எனவே சச்சின் டெண்டுல்கரை ஆலோசகராக ( Mentor) நியமிக்க வாய்ப்புகள் உள்ளது. விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற வீரர்கள் பேட்டிங்கில் சரியான ஃபார்மில் இல்லாத போது சச்சினின் அட்வைஸ்கள் அவர்களுக்கு உதவலாம். மேலும் டிராவிட் - சச்சின் கூட்டணியில் இந்திய அணி பெரும் உயரத்திற்கு செல்லலாம்.

 இக்கட்டான நிலைமை

இக்கட்டான நிலைமை

சச்சின் தற்போது ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஒருவேளை ஜெய் ஷா அவரை சம்மதம் தெரிவிக்க வைத்துவிட்டால், சச்சின் தனது விருப்பமான மும்பை அணியில் இருந்து விலகி வர வேண்டிய சூழல் உருவாகும். ஏனென்றால் ஒரே நேரத்தில் 2 பதவி வகிக்க கூடாது என்பது தான் பிசிசிஐ விதி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 11, 2022, 21:00 [IST]
Other articles published on Jan 11, 2022
English summary
Sachin likely to be appoints as mentor for indian cricket team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X