For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“யாருமே வேண்டாம்”.. பஞ்சாப் அணி எடுத்த அதிரடி முடிவு.. சீனியர் வீரர்களால் நடந்த சண்டை!

சென்னை: வீரர்களை தக்கவைக்கும் விவகாரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Recommended Video

Punjab Kings could target 3 Stars as a Captain at IPL Auction 2022 | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்கவைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் எனவும், வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பட்டியலை சமர்பிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மும்பையின் 2 முக்கிய வீரர்களை மடக்கிய அகமதாபாத் அணி.. பேச்சுவார்த்தை முடிந்ததா?.. முழு விவரம்! மும்பையின் 2 முக்கிய வீரர்களை மடக்கிய அகமதாபாத் அணி.. பேச்சுவார்த்தை முடிந்ததா?.. முழு விவரம்!

 மெகா ஏலம் விதிமுறை

மெகா ஏலம் விதிமுறை

அதன்படி சிஎஸ்கே, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் தங்களது ரிட்டன்ஷன் பட்டியலை தயார் செய்துவிட்ட நிலையில் பஞ்சாப் அணியில் மட்டும் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், அணியை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டார். இதனால் அவரை தவிர்த்துவிட்டு வேறு எந்த வீரர்களை அதிக தொகை கொடுத்து எடுப்பது என ஆலோசனை நடத்தி வந்தது.

நிபந்தனை

நிபந்தனை

இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்காக ஒரு வீரரை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைக்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தான் கேப்டன் ராகுல் வெளியேறுகிறார். அதே சூழல் தான் மற்ற வீரர்களுக்கும் இருக்கிறது எனத்தெரிகிறது. ராகுலுக்கு அடுத்தபடியாக அணியில் முக்கிய வீரராக இருப்பது மயங்க் அகர்வால் தான். ஆனால் அவருக்கே விருப்பம் இல்லை.

இறுதி முடிவு

இறுதி முடிவு

இதுகுறித்து நடத்திய பேச்சுவார்த்தையில் மயங்க் அகர்வால், தன்னை ரூ.16 கோடி கொடுத்து முதன்மை வீரராக தக்கவைக்க வேண்டும் என நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. இதற்கு பஞ்சாப் அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ளாததால் கார சார விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியில் எந்த வீரரையும் தக்கவைக்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

முழு தொகை

முழு தொகை

ஒருவேளை பஞ்சாப் அணி தக்கவைத்தால், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களை தான் தக்கவைக்கும். அப்படி இல்லையென்றால் ரூ.90 கோடி என்ற முழுத் தொகையுடன் மெகா ஏலத்தில் கலந்துக்கொண்டு வேறு வீரர்களை புதிதாக களமிறக்கும் எனத்தெரிகிறது.

Story first published: Saturday, November 27, 2021, 14:52 [IST]
Other articles published on Nov 27, 2021
English summary
Reports says Punjab Kings unlikely to retain any player for IPL 2022 mega auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X