பொய் சொன்னது யார்?.. விராட் கோலிக்கு நோட்டீஸ்.. கங்குலி முடிவால் மீண்டும் கேப்டன்சி சர்ச்சை!

மும்பை: கேப்டன்சி பிரச்சினையில் விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப பிசிசிஐ தலைவர் கங்குலி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டாரா? அல்லது விலகினாரா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடுபிடித்தது.

டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருக்கக்கூடாது என்ற காரணத்தால் ஒட்டுமொத்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்து கோலி நீக்கப்பட்டு ரோகித் புதிய கேப்டனாக சேர்க்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் இனி அவ்வளவு தான்...!! கங்குலி மீது பாக்.முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!! இந்திய கிரிக்கெட் இனி அவ்வளவு தான்...!! கங்குலி மீது பாக்.முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!

கங்குலி விளக்கம்

கங்குலி விளக்கம்

இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்திருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2 அணிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருந்தால் நன்றாக இருக்காது. இதனால்தான், கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கினோம். டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது, விலக வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். இருப்பினும் கோலி விலகினார் எனக்கூறியிருந்தார்.

 கோலி சர்ச்சை கருத்து

கோலி சர்ச்சை கருத்து

ஆனால் விராட் கோலி இதற்கு மறுப்பு தெரிவித்தார். கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்கூட்டியே யாரும் என்னிடம் இதுகுறித்து பேசவில்லை. டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, யாரும் என்னிடம் விலக வேண்டாம் எனக் கூறவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இந்நிலையில் விராட் கோலிக்கு எதிராகஅதிரடி நடவடிக்கை எடுக்க கங்குலி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதாவது டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் கூறவில்லை எனப் பேசிய கோலி, அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என சவுரவ் கங்குலி நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுருந்ததாக தெரிகிறது. இதற்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டிருந்துள்ளார்.

ஜெய்ஷா முயற்சி

ஜெய்ஷா முயற்சி

ஆனால் கங்குலியின் செயலை அறிந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தற்போதைக்கு நீங்கள் நோட்டீஸ் அனுப்பினால், அது பிசிசிஐயில் பெரிய பிரச்சினையை உருவாக்கும். எனவே தயவு செய்து எந்தவித நடவடிக்கையும் வேண்டாம் எனக்கூறியுள்ளார். இதன் காரணமாக தான் கங்குலி மௌனம் காத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலி - கங்குலி இடையே பனிப்போர் நடந்து வருவது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reports says Sourav Ganguly wants to issued notice to Virat Kohli on Captaincy issue
Story first published: Friday, January 21, 2022, 12:50 [IST]
Other articles published on Jan 21, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X