கோலியின் அனைத்து பதவிக்கும் முடிவு.. கே.எல்.ராகுலை வைத்து பிசிசிஐ புது ரூட் .. ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: இந்திய அணியில் இளம் வீரர் கே.எல்.ராகுலுக்கு புதிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

KL Rahul top choice for ODI vice-captaincy in Indian team | Oneindia Tamil

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நேற்று நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலக விருப்பம் இல்லை என்று தெரிவித்த போதும், கட்டாயப்படுத்தி பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய கேப்டன் நியமனம்

புதிய கேப்டன் நியமனம்

டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன்கள் இருந்தால், அணி வீரர்களிடையே தேவையில்லாத குழப்பங்கள், பிரச்னைகள் வரும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கேப்டன்சி பொறுப்புகள் அதிகம் இருப்பதால் தான் விராட் கோலியின் பேட்டிங் சரிவர இல்லாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்களும் இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

புதிய முடிவு

புதிய முடிவு

இந்நிலையில் கேப்டன்சிகளில் இருந்து கோலியை முற்றிலும் நீக்க பிசிசிஐ புதிய முடிவு எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டிருப்பதால் துணைக்கேப்டன் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, டி20 மற்றும் ஒருநாள் அணியின் துணைக்கேப்டன்கள் பதவியை கே.எல்.ராகுலுக்கு வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

29 வயதாகும் கே.எல்.ராகுல் இன்னும் 8 ஆண்டுகள் வரை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடக்கூடிய கால அவகாசம் உள்ளது. அவரை துணைக்கேப்டனாக நியமித்தால் ரோகித்துக்கு அடுத்தபடியாக அவரை கேப்டனாக நியமிக்கலாம். ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் துணைக்கேப்டனாக செயல்பட்டார். அதனை நிரந்தரமாக்கவுள்ளனர்.

ஸ்ட்ரைக் ரேட்

ஸ்ட்ரைக் ரேட்

கே.எல்.ராகுலுடன் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, டிராவிட் போன்றவர்கள் உள்ளதால், கேப்டன்சியில் நிறைய விஷயங்களை கே.எல்.ராகுல் கற்றுக்கொள்ளலாம். இதே போல தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 61.92 என்ற அட்டகாசமான சராசரியை கொண்டுள்ளார். இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்களில் இவரது தான் அதிகபட்சம் ஆகும். எனவே பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிற்குமே இவர் பொறுத்தமாக இருப்பார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reports says that KL Rahul likely to be appointed as Vice captain for ODI and T20I
Story first published: Thursday, December 9, 2021, 9:55 [IST]
Other articles published on Dec 9, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X