யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. டி20 உலகக்கோப்பை அணியில் இணையும் புதிய வீரர்.. அப்போ ஷமியின் நிலை??

ஐதராபாத்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத புதிய வீரர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி... பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 - 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

அட்டகாசமான பேட்டிங் வரிசை உள்ள போதும், இந்திய அணியின் பவுலிங் மட்டும் இன்னும் சொதப்பலாகவே உள்ளது.

விராட் கோலியின் 2 இமாலய சிக்சர்.. ஆடி போன ஆடம் சாம்பா.. 3 ஆண்டுகளுக்கு முன் ஆடிய அதே ஆட்டம்விராட் கோலியின் 2 இமாலய சிக்சர்.. ஆடி போன ஆடம் சாம்பா.. 3 ஆண்டுகளுக்கு முன் ஆடிய அதே ஆட்டம்

பவுலிங் சொதப்பல்

பவுலிங் சொதப்பல்

புவனேஷ்வர் குமார் கடைசி சில ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதாக அதிருப்திகள் இருந்தன. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகிய பவுலர்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவுடனான 3வது டி20-ல் கூட 117 - 6 விக்கெட்கள் சென்றுவிட்ட போதும், 185 ரன்கள் வரை அடிக்கவிட்டு விட்டனர்.

ஷமியின் நிலைமை

ஷமியின் நிலைமை

இந்நிலையில் தான் பிசிசிஐ முகமது ஷமியின் விஷயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய களத்தில் ஷமி பொருத்தமாக இருப்பார். இதற்காக பேக் - அப் வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

அடுத்ததாகவுள்ள தென்னாப்பிரிக்க தொடருக்குள் அவர் முழு ஃபிட்னஸுடன் வந்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பைக்கு செல்ல முடியும். ஆனால் அவர் தயாராவதற்கு இன்னும் பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் போல் தெரிகிறது. இதனால் இளம் வீரரான உம்ரான் மாலிக்கை சேர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியில் அசால்டாக 150+ கிமீ வேகத்தில் வீசக்கூடியவர் உம்ரான் மாலிக். ஆஸ்திரேலியா களங்களில் வேகமும், பவுன்ஸும் சிறப்பாக இருக்கும் என்பதால் உம்ரான் மாலிக் பயன்படலாம். எனவே ஷமிக்கு பதிலாக உம்ரானை தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reports says Umran malik likely to join in India's T20 world cup squad, after Shami affected by Corona
Story first published: Monday, September 26, 2022, 17:25 [IST]
Other articles published on Sep 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X