For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆத்துல போற தண்ணி.. ஐபிஎல் அம்பயர்களுக்கும் நன்றாகவே பாய்ந்தோடியது மன்னா!

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் மூலம் வீரர்கள்தான் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால்.. திருத்தம்.. அம்பயர்களுக்கும் கூட கை நிறைய பை நிறைய அள்ளித் தருகிறதாம் பிசிசிஐ.

ஐபிஎல் போட்டிகளில் பணியாற்றும் இந்திய அம்பயர்களும், போட்டி நடுவர்களும் (Referee) கூட நன்றாக சம்பாதித்து வருகிறார்களாம். அவர்களையும் பை நிறைய போட்டுக் கொடுத்து குதூகலப்படுத்துகிறதாம் பிசிசிஐ.

ஐபிஎல் 2016 போட்டியில் அம்பயர்களாகப் பணியாற்றிய இந்திய அம்பயர்கள் சி.கே.நந்தன், அனில் செளத்ரி, சம்சுதீன் ஆகியோருக்கு கிட்டத்தட்ட தலா ரூ. 40 லட்சம் வரை சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.

செளத்ரிக்கு ரூ. 39.63 லட்சம்

செளத்ரிக்கு ரூ. 39.63 லட்சம்

டெல்லியைச் சேர்ந்த அம்பயர் அனில் செளத்ரி ஐபிஎல் 2016 போட்டியில் சம்பாதித்த பணம் ரூ. 39,63,762 அதாவது 39.63 லட்சமாகும்.

நந்தன் - சம்சுதீன்

நந்தன் - சம்சுதீன்

நந்தன், சம்சுதீன் ஆகியோர் தலா ரூ. 40.83 லட்சம் பணத்தை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சம்பாதித்துள்ளனர். அம்பயர் அனந்தபத்மநாபனுக்கு ரூ. 26.65 லட்சம் கிடைத்துள்ளது.

ஸ்ரீநாத்துக்கு ரூ. 26 லட்சம்

ஸ்ரீநாத்துக்கு ரூ. 26 லட்சம்

போட்டி நடுவராக செயல்பட்டதற்காக முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் ரூ. 26 லட்சம் சம்பாதித்துள்ளார்.

நல்ல சம்பளம்

நல்ல சம்பளம்

இதன் மூலம் ஐபிஎல்லில் வீரர்கள் மட்டுமல்லாமல் நடுவர்களும் கூட நல்ல சம்பளம் தரப்பட்டுள்ளது தெரிய வருகிறது. வேலைன்னு கிடைச்சா இங்க போய் வேலை பாக்கனும்யா.. என்னா "கம்பெனி" என்னா "கம்பெனி"...!

Story first published: Tuesday, July 12, 2016, 15:42 [IST]
Other articles published on Jul 12, 2016
English summary
Cash-rich Indian Premier League (IPL) is not only the most lucrative franchise-based leagues for players, even Indian umpires and referees are being paid handsomely by the BCCI for discharging their duties in the high-profile tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X