For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி பிளான் பண்ணி தான் உலக கோப்பைகளை ஜெயிச்சோம்..!! உங்களால முடியுமா? சீக்ரெட்டை சொன்ன பாண்டிங்

கேன்பரா:சிறந்த ஒருங்கிணைப்பு, வீரர்களின் ஒத்துழைப்பால் தான் ஆஸி. அணி உலக கோப்பைகளை வென்றிருப்பதாக வெற்றி ரகசியத்தை வெளியில் சொல்லி இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஜாம்பவான்கள் என்றால் அது மேற்கிந்திய தீவுகள் அணி தான். 1975 மற்றும் 1979 ஆகிய 2 உலக கோப்பைகளையும் வென்ற அணி அதன் பிறகு கோப்பையை ஜெயிக்கவில்லை. 1983ம் ஆண்டு அந்த அணியின் ஹாட்ரிக் சாம்பியன்ஸ் என்ற ரெக்கார்டை முறியடித்தது இந்திய அணி.

கிளைவ் லாயிட் என்ற ஜாம்பவான் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை போன்று ஆதிக்கம் செலுத்தி வரும் அணி என்றால் ஆஸ்திரேலியா. பாண்டிங் தலைமையிலான அந்த அணி தொடர்ந்து 3 முறை உலக கோப்பைகளை வென்றது.

ஆல் தி பெஸ்ட்...! கோப்பையுடன் வாங்க...! விமான நிலையத்தில் இந்திய வீரர்களை வழியனுப்பிய ரசிகர்கள் ஆல் தி பெஸ்ட்...! கோப்பையுடன் வாங்க...! விமான நிலையத்தில் இந்திய வீரர்களை வழியனுப்பிய ரசிகர்கள்

2 முறை கோப்பை

2 முறை கோப்பை

1999ல் வாக் சகோதரர்களில் ஒருவரான ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அப்போது அந்த அணியில் ஆடிய இளம் வீரர் பாண்டிங், அடுத்த உலக கோப்பை தொடரில் கேப்டனாக உருவெடுத்தார். 2003 மற்றும் 2007 ஆகிய 2 உலக கோப்பைகளையும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

ஹாட்ரிக் படைத்த ஆஸி.

ஹாட்ரிக் படைத்த ஆஸி.

இதன்மூலம் 1999, 2003, 2007 என தொடர்ந்து 3 முறை கோப்பையை வென்று அசத்தியது ஆஸ்திரேலிய அணி. அந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா தான் ஆதிக்கம் செலுத்திய நம்பர் 1 அணியாக திகழ்ந்தது.

தடை போட்ட இந்தியா

தடை போட்ட இந்தியா

2011ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. முதல் முறையாக காலிறுதியில் ஆஸ்திரேலியா அணியை சொந்த நாட்டுக்கு அனுப்பிய பெருமை இந்தியாவையே சேரும்.

5 முறை சாம்பியன்ஸ்

5 முறை சாம்பியன்ஸ்

பின்னர், 2015 உலக கோப்பையை மீண்டும் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது.மொத்தம் 5 முறை உலக கோப்பையை வென்று அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக ஆஸ்திரேலியா உள்ளது.

பாண்டிங் கருத்து

பாண்டிங் கருத்து

இந்த முறையும் உலக கோப்பையுடன் தான் சொந்த ஊர் திரும்பும் என்று மார் தட்டும் விதமாக இருக்கிறது ஆஸ்திரேலியா. தொடரும் இந்த வெற்றிக்கான சூட்சுமம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

அவர் கூறியிருப்பதாவது: ஆரம்ப கால கட்டங்களில் அணியில் தலைசிறந்த பவுலர்கள் இருந்தனர். பவுலிங், அணியில் உள்ளவர்களின் உத்வேகம் என ஓர் ஒருங்கிணைப்பு இருந்தது.

ரகசியம் இதுதான்

ரகசியம் இதுதான்

1999ம் ஆண்டு முதல் 3 உலக கோப்பை அணிகளில், 1999 மற்றும் 2003 ஆகிய தொடருக்கான அணிகளிலும் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஒரே அணிதான் ஆடியது. அணியின் ஒற்றுமை, சிறப்பான பந்துவீச்சு, வீரர்களின் ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பே கோப்பைகளை வெல்ல காரணம் என்றார்.

Story first published: Wednesday, May 22, 2019, 14:27 [IST]
Other articles published on May 22, 2019
English summary
Ricky ponting describes the secret of success in past world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X