பேட்டிங்கின்போது சரியான ஷூக்களை உபயோகிக்கணும்... சீனியர் வீரரின் அட்வைஸ்!

டெல்லி : அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் மைதானத்தில் முறையான ஷூக்களை பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

நம்பர் 1 மும்பையை வீழ்த்துமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்? பரபர மோதல்!

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்களில் ஸ்பைக்ஸ் ஷூக்களை பேட்ஸ்மேன்கள் உபயோகிப்பது குறித்து வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்

ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியின் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பலனை அளிக்கும்

சிறப்பான பலனை அளிக்கும்

இந்நிலையில் பேட்டிங்கின்போது சரியான ஷூக்களை உபயோகிப்பது ஆச்சர்யத்தை அளிக்கும்வகையில் சிறப்பான பலன்களை அளிக்கும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் ஸ்பைக்ஸ் ஷூக்களை உபயோகிப்பது குறித்தும் அவர் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முறையான ஷூக்களை அணிந்த ஜாம்பவான்கள்

முறையான ஷூக்களை அணிந்த ஜாம்பவான்கள்

ரப்பர் சோல்களை கொண்ட ஷூக்களை பயன்படுத்தும்போது ட்ரை பிட்ச்களிலும் சிறப்பான பலனை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், திலிப் வெங்சர்க்கார் உள்ளிட்ட இந்திய வீரர்களும் விவியன் ரிச்சர்ட்ஸ், ஆலன் பார்டர் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் இத்தகைய ட்ரை ட்ராக்குகளில் ரப்பர் சோல்களை கொண்ட ஷூக்களை பயன்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

சரியான ஷாட்கள்

சரியான ஷாட்கள்

சரியான ஷூக்கள் மற்றும் சரியான ஷாட்களை பயன்படுத்துவது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரன்களின்போது ஸ்லிப் ஆவதை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் டென்னிசிலும் அனைத்து விம்பிள்டன் வீரர்களும் இத்தகைய ஷூக்களையே பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I have seen some amazing Test knocks being played on tough surfaces by batsmen who wore shoes with rubber soles -Azhar
Story first published: Friday, February 26, 2021, 17:38 [IST]
Other articles published on Feb 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X