For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்மிண்டனில் முதல் "ஷாக்"... ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா முதல் சுற்றில் தோல்வி!

ரியோ டி ஜெனீரோ: இந்திய பேட்மிண்டன் அணிக்கு இன்று ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே தோல்வி கிடைத்துள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியைத் தழுவியது.

உலகின் நம்பர் 1 ஜோடியான ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ மற்றும் அயாகா டகசாகி ஜோடியிடம், இந்திய ஜோடி 15-21, 10-21 என்ர நேரடி செட் கணக்கில் தோற்றுப் போனது.

Rio Olympics: India's Jwala Gutta-Ashwini Ponnappa pair loses

முதல் செட்டில் இந்திய ஜோடி ஆரம்பத்தில் நன்றாகத்தான் ஆடியது. ஆனால் அதன் பின்னர் ஜப்பான் வீராங்கனைகள் சுதாரித்து விட்டனர். இதனால் இந்திய ஜோடி வீழ்ச்சியிலிருந்து மீள முடியாமல் போனது.

முதல் செட்டை 19 நிமிடத்திலும், 2வது செட்டை 17 நிமிடத்திலும் ஜப்பான் ஜோடி வென்றது குறிப்பிடத்தக்கது.

ஜூலாலா - அஸ்வினிக்கு குரூப் பிரிவில் இன்னும் 3 போடடிகள் உள்ளன. ஒரு குரூப்பில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி காலிறுதிக்குத் தகுதி பெறும். அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜுவாலா - அஸ்வினி வென்றால் காலிறுதிக்குப் போக முடியும்.

இன்றுதான் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கியுள்ளன. சாய்னா இன்று இரவு விளையாடவுள்ளார்.

Story first published: Thursday, August 11, 2016, 17:52 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
India's Jwala Gutta and Ashwini Ponnappa were off to a losing start in the women's doubles category in badminton at the Rio Olympics 2016 here today (August 11). The Indian duo was beaten by world number pair of Misaki Matsutomo-Ayaka Takahashi (Japan) in 15-21, 10-21 straight sets in Group A on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X