For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணுல திமிரு.. விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற "சே" புஜாரா.. தரம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்று அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

பிரிஸ்போனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது.

மூத்த வீரர் இப்படி பண்ணலாமா? களத்தில் ரோஹித் சர்மா ஆடிய விதம்.. தொடரும் கேள்விகள்.. ஷாக்கிங்!

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

நான்காவது டெஸ்டில் இன்னும் 50 ஓவர்கள் மீதம் உள்ளது. இதில் 186 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா காயம் அடைந்து வலியில் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வலியில் துடித்தார்

வலியில் துடித்தார்

சுப்மான் கில் அவுட்டான பின் ஹஸல்வுட் ஓவரில் புஜாரா பேட்டிங் செய்து வந்தார். புஜாரா பேட்டிங் செய்யும் போது அவரை தாக்கும் விதத்தில் ஹஸல்வுட் குறி வைத்து பேட்டிங் செய்தார். உடலை நோக்கி பந்துகளை சரமாரியாக வீசினார்.

கோபம்

கோபம்

இதில் ஹஸல்வுட் 145 கிமீ வேகத்தில் வீசிய ஷார்ட் பந்து ஒன்று வேகமாக வந்து புஜாரா கையில் பட்டது. புஜாரா கிளவுஸ் அணிந்து இருந்தாலும் அதையும் தாண்டி அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே பேட்டை தூக்கி எறிந்துவிட்டு, புஜாரா கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தார்.

கிளவுஸ்

கிளவுஸ்

கையில் இருந்த கிளவுஸை நீக்கிவிட்டு, கீழே விழுந்து புஜாரா கத்த தொடங்கினார். இதற்கு முன் பலமுறை புஜாரா கையில் காயம்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட அவர் இந்த அளவிற்கு துடித்தது கிடையாது. ஆனால் இன்று மிகவும் கடுமையாக புஜாரா துடித்து போனார்.

மீண்டும்

மீண்டும்

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பயிற்சியின் போதும் புஜாரா கையில் காயம் ஏற்பட்டது. இன்று இவருக்கு ஏற்பட்ட காயத்தில் விரல் எலும்பு கண்டிப்பாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

பவுன்சர்

பவுன்சர்

இதற்கு பின்பும் ஹஸல்வுட் வீசிய மோசமான பீமர் பந்து ஒன்று நேராக வந்து புஜாரா தலையை தாக்கியது. ஆனால் அதற்கு பின்பும் கலக்கம் இல்லாமல் புஜாரா களத்தில் உறுதியாக ஆடிக்கொண்டு இருக்கிறார். இந்த பந்துக்கு பின் ஹஸல்வுட்டை புஜாரா முறைத்து பார்த்த சம்பவம் ஒரு மாஸ் திரைப்பட காட்சி போல இருந்தது. இந்தியாவை இமாலய வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் புஜாரா இன்று உறுதியாக இருக்கிறார். அவரின் போராட்டம் வெல்லும் என்று நம்பலாம்!

Story first published: Tuesday, January 19, 2021, 13:29 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Rise up to the Bouncer Bullies: Pujara showed so much of characteristic against Australia in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X