For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்தவங்க சொல்றது தப்புன்னு அவர்தான் நிரூபிக்கனும் - கபில் தேவ்

Recommended Video

ரிஷப் பண்டுக்கு கபில் தேவ் கூறிய அறிவுரை | Kapil Dev Advices Rishab Pan

சென்னை : ரிஷப் பந்த் குறித்த விமர்சனங்கள் அனைத்தும் தவறு என்று அவர்தான் நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கபில்தேவ் சிறந்த வீரராக இருப்பவர், தேர்வாளர்கள் தன்னை நிராகரிப்பதற்கோ ஓய்வு கொடுப்பதற்கோ சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பந்த் மற்றவர்கள் மீது குறைகூறாமல் தன்னுடைய கேரியரை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து ரன்கள் அடித்து தன்னை நிரூபிப்பதே ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய இடத்தை விட்டுகொடுத்த பந்த்

தன்னுடைய இடத்தை விட்டுகொடுத்த பந்த்

தோனிக்கு மாற்றாக பார்க்கப்பட்ட இந்திய கீப்பர் ரிஷப் பந்த், தனக்கு அதிகப்படியான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டும் அதை பயன்படுத்த தவறி அவருடைய இடத்தை கே.எல்.ராகுலுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

அதிரடி ஆட்டத்தால் சாதனை

அதிரடி ஆட்டத்தால் சாதனை

இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி இந்திய அணியின் முக்கியமான 3வது இடத்தில் சரியான ஆட்டத்தை கொடுத்து சாதனை புரிந்துவரும் கே.எல். ராகுல் கீப்பிங்கிலும் சரியாக விளையாடி வருகிறார்.

கபில்தேவ் விளக்கம்

கபில்தேவ் விளக்கம்

ரிஷப் பந்த் குறித்த பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில், மற்றவர்களின் சர்ச்சைக் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என்றால் அது ரிஷப் கையில்தான் உள்ளது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

மற்றவர்களின் வாயை அடைக்க வேண்டும்

மற்றவர்களின் வாயை அடைக்க வேண்டும்

தன்னை குறித்த மற்றவர்களின் கருத்துக்களை நிறுத்த வேண்டுமென்றால் தொடர்ந்து ரன்களை குவித்து, தன்னுடைய திறமையை ரிஷப் பந்த் நிரூபிக்க வேண்டும் என்றும் கபில்தேவ் கூறியுள்ளார். அவர் தன்னுடைய தற்போதைய நிலைக்கு யாரையும் குறைகூற முடியாது என்றும்தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் அறிவுரை

கபில்தேவ் அறிவுரை

கிரிக்கெட் வீரர்கள் தங்களின் திறமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள கபில்தேவ், தேர்வாளர்கள், ஒரு வீரரை தேர்வு செய்யாமல் நிராகரிக்கவோ, ஓய்வு கொடுக்கவோ சந்தர்ப்பம் ஏற்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Sunday, January 26, 2020, 18:19 [IST]
Other articles published on Jan 26, 2020
English summary
Kapil Dev Advices Rishab Pant to score more runs and prove everybody wrong
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X