120 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.. ரிஷப் பண்டின் மகத்தான சாதனை.. இந்தியா பதிலடி

பிர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பதிலடி தந்த வருகிறது.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி, கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தது.

சுப்மான் கில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 13 ரன்களில் வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DKதினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK

ஏமாற்றிய நட்சத்திரம்

ஏமாற்றிய நட்சத்திரம்

இளம் வீரர் விஹாரி 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் விராட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்த போது பாட்ஸ் வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆனார். இதனையடுத்து களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியாக ஆட முற்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களில் வெளியேறினார்.

சரிவிலிருந்து மீட்பு

சரிவிலிருந்து மீட்பு

98 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி தடுமாறிய போது, 6வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். முதலில் ,ருவரும் பொறுமையாக விளையாட, ரிஷப் பண்ட் ஆபத்து இல்லாத பந்தை அடித்து ஆடி ரன்களில் சேர்த்தார். அவருக்கு ஜடேஜா பக்க பலமாக இருக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ஐ தாண்டியது.

101 மீட்டர் சிக்சர்

101 மீட்டர் சிக்சர்

இதனையடுத்து, ரிஷப் பண்ட் பவுண்டரிகளும், சிக்சருமாக விளாச, அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு ஆண்டர்சன், பாட்ஸ் என யார் பந்துவீசினாலும், பண்ட் அடித்து ஆடினார். குறிப்பாக ஜாக் லீச் ஓவரில் ஒற்றை கையில் தனது டிரெட் மார்க் ஷாட் மூலம் 101 மீட்டருக்கு சிக்சர் பறக்கவிட்டார்.

ரிஷப் பண்ட் சாதனை

ரிஷப் பண்ட் சாதனை

இதன் மூலம் ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் விளாசி ரிஷப் பண்ட் அசத்தினார். இதன் மூலம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 120 ஆண்டுக்கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் அடித்தார். மேலும் இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில் உள்ள விக்கெட் கீப்பர்களும் வெளிநாட்டு மண்ணில் மொத்தமாக அடித்த சதம் 4ஆகும்.

தனித்துவமான சாதனை

தனித்துவமான சாதனை

ஆனால் ரிஷப் பண்ட் மட்டுமே அந்நிய மண்ணில் 4 சதங்களை தனியாக அடித்துள்ளார். இதே போன்று rர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை அடித்த இளம் வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். மறுபுறம் ஜடேஜா அரைசதம் விளாச, இந்த ஜோடி 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்கள் குவித்தார். இதில் 19 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜடேஜா 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rishabh pant created numerous world record by hitting century in Edgbaston test120 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.. ரிஷப் பண்டின் மகத்தான சாதனை.. இந்தியா பதிலடி
Story first published: Friday, July 1, 2022, 23:28 [IST]
Other articles published on Jul 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X