For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தை பயமுறுத்திய பண்ட்... டிக்ளர் செய்யாததற்கு இது தான் காரணம்.. உண்மையை உடைத்த ரூட்!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது ரிஷப் பண்ட்-ஐ மனதில் வைத்து ஒரு முடிவை எடுத்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து நிர்ணயித்த 420 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நேரம் சரியில்லை.. பேரை மாத்த வேண்டியதுதான்.. மொத்தமாக புதிய பெயர் வைக்கும் ஐபிஎல் அணி.. கடவுளே! நேரம் சரியில்லை.. பேரை மாத்த வேண்டியதுதான்.. மொத்தமாக புதிய பெயர் வைக்கும் ஐபிஎல் அணி.. கடவுளே!

இந்திய வீரர்கள் அஸ்வின், புஜாரா, கோலி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டபோதும் இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து தொடரை வெல்லவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நீடிக்கவும், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

அபாரம்

அபாரம்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் அபார இரட்டை சதம் மூலம் அந்த அணி முதல் இன்னிங்சில் 578 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் அசத்த, முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்களுக்கு சுருண்டது.

தோல்வி

தோல்வி

தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை 241 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும் அந்த அணியின் வெற்றியை இந்தியாவால் தடுக்க முடியவில்லை.

தாமதம்

தாமதம்

2வது இன்னிங்சில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி அதிக ரன்கள் முன்னிலையில் இருந்த போதும், அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் டிக்ளர் செய்யாமல் இருந்தார். இதனால் 178 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரூட்டின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என பல்வேறு ஜாம்பவான்களும் குழம்பி இருந்தனர்.

பயமுறுத்திய பண்ட்

பயமுறுத்திய பண்ட்

டிக்ளர் செய்யாதது குறித்து பேசிய ஜோ ரூட், அவரின் முடிவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் காரணம் என தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டிய பண்ட் 328 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அந்த சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்பதால் 400 ரன்களுக்கு மேலும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக ஜோ ரூட் தெரிவித்தார்.

Story first published: Wednesday, February 10, 2021, 22:12 [IST]
Other articles published on Feb 10, 2021
English summary
England Captain Root Explained 'Rishabh Pant factor' as the main reason behind the decision of delay declaration in the second innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X