For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரையே மாத்தற திறமை அவருக்கு இருக்கு... அவுட் பத்தியெல்லாம் யோசிக்கறதே இல்ல... ஹுசைன் வெளிப்படை!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் துவங்கியுள்ளது.

முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 91 ரன்களை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இவ்ளோ இடைவெளியா விடறது... ஒரு டிரக் போயிருக்கலாம்... விளாசிய சுனில் கவாஸ்கர் இவ்ளோ இடைவெளியா விடறது... ஒரு டிரக் போயிருக்கலாம்... விளாசிய சுனில் கவாஸ்கர்

இந்நிலையில் அவர் தொடரையே மாற்றும் திறமை மிக்கவர் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட்.. 2வது இன்னிங்ஸ்

முதல் டெஸ்ட்.. 2வது இன்னிங்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஐந்தாவது நாளின் ஆட்டம் துவங்கியுள்ளது. இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா ஆடி வருகின்றனர். நேற்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் 2வது இன்னிங்சை இந்திய அணி ஆடத் துவங்கிய நிலையில் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய பந்த்

சிறப்பாக ஆடிய பந்த்

நேற்றைய தினம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவிற்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியை தற்போது இந்திய அணி தொடர்ந்து வருகிறது. கடந்த முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த் 88 பந்துகளில் 91 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார்.

அவுட் குறித்து பயமில்லை

அவுட் குறித்து பயமில்லை

இந்நிலையில் ரிஷப் பந்த் தொடரையை மாற்றி அமைக்கும் அதிசயமான திறமை கொண்டவர் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தன்னுடைய ஸ்டைலில் பயமின்றி விளையாடியிருந்தால் இங்கிலாந்திடம் இருந்து தொடரையே கைப்பற்றியிருப்பார் என்றும் கூறியுள்ளார். அவர் அவுட் குறித்தெல்லாம் பயப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பார்ட்னர்ஷிப்பில் 119 ரன்கள்

பார்ட்னர்ஷிப்பில் 119 ரன்கள்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் 578 என்ற இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணி 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ரிஷப்பின் இந்த ஸ்கோர் முக்கியமானதாக இருந்தது. புஜாராவுடன் இணைந்து பந்த், 119 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்தார்.

Story first published: Tuesday, February 9, 2021, 15:54 [IST]
Other articles published on Feb 9, 2021
English summary
Pant does not think about getting out -Nasser Hussain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X