For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த வீரர் விராட் மற்றும் வில்லியம்சன் மாதிரி...கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணினா எங்கேயோ போய்டுவாரு...

மும்பை : இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

அணியின் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக இந்த சீசனில் பொறுப்பேற்றுள்ளார்.

ஆட்டத்தின்போது ரோகித்திடம் இதனை கவனத்தீர்களா.. எவ்ளோ பெரிய மனசு அவருக்கு.. குவியும் பாராட்டு ஆட்டத்தின்போது ரோகித்திடம் இதனை கவனத்தீர்களா.. எவ்ளோ பெரிய மனசு அவருக்கு.. குவியும் பாராட்டு

இந்நிலையில் அணியின் கோச் ரிக்கி பாண்டிங், ரிஷப் பந்த் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற டெல்லி அணி

வெற்றி பெற்ற டெல்லி அணி

ஐபிஎல் 2021 தொடரின் சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்நிலையில் நாளைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் மோதவுள்ளது. தன்னுடைய வெற்றிக் கணக்கை தொடர ரிஷப் தலைமையிலான அணி தீவிரம் காட்டி வருகிறது.

ரிக்கி பாண்டிங் பாராட்டு

ரிக்கி பாண்டிங் பாராட்டு

இந்நிலையில் அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் குறித்து அணியின் கோச் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வலைதளத்தில் பேசியுள்ள அவர், ரிஷப் பந்த் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் போன்றவர் என்று பாராட்டியுள்ளார்.

சிறப்பாக மாற்றிய ரிஷப்

சிறப்பாக மாற்றிய ரிஷப்

அவர் எப்போதும் தன்னுடைய அணியை இறுதிவரை வழிநடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் அவருடைய விக்கெட் கீப்பிங் குறித்து இருந்த கேள்வியை தொடர்ந்த பயிற்சிகளின்மூலம் சிறப்பாக பந்த் மாற்றியுள்ளதாகவும் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் நீடிப்பார்

ரிஷப் பந்த் நீடிப்பார்

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தன்னுடைய கீப்பிங்கின் மூலம் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பானது என்றும் அவர் கீப்பிங்கில் மேலும் திறமையை வளர்த்துக் கொண்டால், விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் அடுத்த 10 -12 வருடங்களுக்கு இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி அணி வெற்றி

டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் 2021 தொடரிலும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கேவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரிஷப் பந்த் வெற்றி கொண்டுள்ளார். கடந்த சீசனில் அவர் சிறப்பான ஆட்டங்களை அளிக்காமல் ஏமாற்றம் அளித்ததாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிஷப் சிறப்பாக விளையாடுவார்

ரிஷப் சிறப்பாக விளையாடுவார்

ஆனால் இந்த சீசனில் அவர் சிறப்பான ஆட்டங்களை அளிப்பார் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களல் அவர்து செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் அவர் போட்டியில் இறுதிவரை ஆடினால், அந்த போட்டியில் வெற்றிதான் என்றும் பாண்டிங் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 18:55 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
If you know he is there at the end, you are going to win more matches -Ponting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X