For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப்பை மீண்டும் உசுப்பேற்றும் முன்னாள் வீரர்கள்... கேப்டனாகும் திறமை அதிகமாக உள்ளதாக பாராட்டு

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 172 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஹெட்மயர் இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையிலும் வெற்றியை கைநழுவினர்.

2 முக்கிய வீரர்கள் ஆடுவது சந்தேகம்.. சிஎஸ்கேவில் பெரிய மாற்றம்.. இன்று ஆட போகும் பிளேயிங் 11 விவரம்! 2 முக்கிய வீரர்கள் ஆடுவது சந்தேகம்.. சிஎஸ்கேவில் பெரிய மாற்றம்.. இன்று ஆட போகும் பிளேயிங் 11 விவரம்!

இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

23வது போட்டி

23வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் 23 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி டெல்லி அணியை வெற்றிக் கொண்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை இல்லாத வகையில் 1 ரன் வித்தியாசத்தில் இந்த தோல்வி அமைந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கைநழுவிய வெற்றி

கைநழுவிய வெற்றி

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் ஹெட்மயர் இருவரும் இறுதிவரை வெற்றிக்காக போராடினர். இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து அரைசதங்களை குவித்து இறுதி ஓவர் வரை போட்டியை விறுவிறுப்பாக்கினர். ஆயினும் சிராஜின் சிறப்பான பந்துவீச்சில் வெற்றி அவர்களிடம் இருந்து நழுவியது.

பிரக்யான் ஓஜா பாராட்டு

பிரக்யான் ஓஜா பாராட்டு

இந்நிலையில் ரிஷப் பந்த் சிறப்பான கேப்டன்ஷிப்பை டெல்லி கேபிடல்ஸ் அணிக்ககாக வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் வீரர் மற்றும் ஐபிஎல் கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் பிரக்யான் ஓஜா தெரித்துள்ளார். எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக மாறவும் அவருக்கு திறமை உள்ளதாகவும் ஓஜா தெரிவித்துள்ளார்.

பந்திடம் சிறப்பான திறமை

பந்திடம் சிறப்பான திறமை

தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் ரிஷப் பந்த் தொடர்ந்து தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் கேப்டன்கள் சவுரவ் கங்குலி மற்றும் தோனி ஆகியோரிடம் காணப்பட்ட ஆரா பந்த்திடமும் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உசுப்பேற்றிய முன்னாள் வீரர்கள்

உசுப்பேற்றிய முன்னாள் வீரர்கள்

ரவி சாஸ்திரியின் கோச்சிங்கில் ரிஷப் பந்த் தன்னை மேலும் சிறப்பாக முன்னேற்றிக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அடுத்த தோனி ரிஷப் பந்த் தான் என்று அவரை பல்வேறு தரப்பினரும் உசுப்பேற்றியதன் விளைவாக ரிஷப் பந்த் தன்னுடைய திறமைகளில் தன்னை நிரூபிக்க தவறினார்.

மீண்டும் பாராட்டுக்கள்

மீண்டும் பாராட்டுக்கள்

அதிலிருந்து மீண்டு தற்போது அவர் மீண்டும் தன்னை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த கேப்டன் ரிஷப்தான் என்று அவரை பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதை அவர் நிஜமாக்கினால் அது சிறப்பானது. ஆனால் முன்னதாக ஏற்பட்ட சொதப்பல் மீண்டும் நிகழ்ந்தால் அவரது சிறப்பு குறைய அது காரணமாக அமையும்.

Story first published: Wednesday, April 28, 2021, 20:24 [IST]
Other articles published on Apr 28, 2021
English summary
Rishabh Pant shows this maturity, he can be the captain -Ojha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X