For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பந்த் திறமையானவர்தான்... ஆனால் அவர் கிட்ட டெக்னிக் சரியில்லையேப்பா.. பரூக் இன்ஜீனியர்

மும்பை : ரிஷப் பந்த் மிகுந்த திறமைசாலிதான் என்று தெரிவித்துள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் பரோக் இன்ஜினீயர், ஆனால் அவர் தவறான தொழில்நுட்பத்தை கையாள்வதால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் மீது அதிகமான அழுத்தம் புகுத்தப்படுவதாக தெரிவித்துள்ள இன்ஜினீயர், பந்தை தொட்டால் கேட்ச்சை விட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே ரிஷப், பந்தை தொடவே பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் போது ரிஷப் தன்னை சந்தித்து பேசியதாகவும், அவருக்கு விக்கெட் கீப்பிங்கில் தான் பயிற்சியளிக்க விரும்பியதாகவும் இன்ஜினீயர் மேலும் தெரிவித்துள்ளார்.

 சிறப்பான ஆட்டத்தை தரத்தவறிய ரிஷப்

சிறப்பான ஆட்டத்தை தரத்தவறிய ரிஷப்

இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் ஆட்டக்காரராகவும் உள்ள ரிஷப் பந்த், சமீப காலங்களில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அளிக்க தவறி வருகிறார். இதன்மூலம் பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.

 அணிக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்

அணிக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்

ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணி மற்றும் நிர்வாகம் ரிஷப் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக அவருக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார். இதற்கு தன்னுடைய சிறப்பான ஆட்டம் மூலம் அவர் நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 அதிகப்படியான அழுத்தம்

அதிகப்படியான அழுத்தம்

ரிஷப் குறித்து முன்னாள் விக்கெட் கீப்பர் பரோக் இன்ஜினீயர் கூறுகையில், பல்வேறு தரப்பிலும் ரிஷப் மீது அதிகப்படியான அழுத்தம் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 தவறான தொழில்நுட்பம்

தவறான தொழில்நுட்பம்

ரிஷப் பந்த் திறமையான ஆட்டக்காரர்தான் என்று தெரிவித்துள்ள இன்ஜினீயர், ஆனால் அவர் தனது ஆட்டத்தில் பயன்படுத்திவரும் தவறான அணுகுமுறையால் அவரால் முழு திறமையை வெளிக்காட்ட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

 கேட்ச்சை விட்டுவிடுவோமோ என்ற அச்சம்

கேட்ச்சை விட்டுவிடுவோமோ என்ற அச்சம்

கேட்ச்சை விட்டுவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக ரிஷப் பந்த் பந்தை தொடவே பயப்படுவதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்ஜினீயர் தெரிவித்துள்ளார்.

 பயிற்சி அளிக்க உறுதி

பயிற்சி அளிக்க உறுதி

உலக கோப்பை போட்டிக்கு இடையில் ரிஷப் தன்னை சந்தித்து பேசியதாகவும், தங்களுடைய நீண்ட உரையாடலை அடுத்து தான் ரிஷப்பிற்கு விக்கெட் கீப்பிங்கில் பயிற்சியளிக்க உறுதி அளித்ததாகவும் இன்ஜினீயர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 5, 2019, 16:46 [IST]
Other articles published on Dec 5, 2019
English summary
Rishabh Pant is scared to hold the ball thinking he drops a catch - Engineer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X