தோனி எல்லாம் ஜூஜூபி..!! இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு..! விட்றாதீங்க.. ஓர் முன்னாள் வீரர் அதிரடி

மும்பை: டெஸ்ட் போட்டிகளில் தோனியைவிட, இளம்வீரர் பன்ட் தான் சிறப்பாக ஆடுவார் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

2014ம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், தல தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். அதன்பிறகு அவரது இடத்தில் இளம் வீரர் சாஹா மற்றும் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் ஆகிய வீரர்கள் களம் இறங்கினர். மாறி, மாறி இந்த மூவரும் அணியில் விளையாடி வந்தனர்.

அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பினை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வில்லை. ஆகையால் டெஸ்ட் போட்டிகளில் நிலையான ஒரு விக்கெட் கீப்பர் இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் யாரும் பொறுப்பான கீப்பராக இல்லையோ என்ற கேள்வியும் எழுந்தது.

அடச்சே.. இப்படியா ஒரு டீமே கேவலமா அவுட் ஆவாங்க.. ஆஸி.விடம் மொத்தமா போண்டியான இங்கிலாந்து!

பன்ட் செயல்பாடு

பன்ட் செயல்பாடு

இந்திய அணிக்கு இங்கிலாந்து தொடரின்போது பன்ட் தேர்வானார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பன்ட் 696 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 சதங்கள் அடங்கும். அந்த 2 சதங்களும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எடுக்கப்பட்டது.

சேவாக் ஓபன் டாக்

சேவாக் ஓபன் டாக்

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் யார் விக்கெட் கீப்பராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் அவ்வப்பொழுது கருத்துகளை கூறி வந்தனர். அதில் லேட்டஸ்டாக, வீரேந்திர சேவாக் ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அது தோனியின் விக்கெட் கீப்பிங் இடத்தில் யார் என்பதை தெரிவித்திருக்கிறார்.

தகுதியானவர்

தகுதியானவர்

சேவாக் கூறியதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக சில போட்டிகளை பன்ட் எதிர் கொள்ள வேண்டும். மேலும் அவரது ஷாட்டுகளை சரியாக தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாட தகுதி உடைய வீரர்.

மாற்றானவர்

மாற்றானவர்

என்னை பொறுத்த வரையில் தோனிக்கு சரியான மாற்று பன்ட்தான். வரக்கூடிய ஆண்டுகளில் அவர் இந்திய அணியின் துவக்க வீரராக டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

சாதிப்பார் என நம்பிக்கை

சாதிப்பார் என நம்பிக்கை

ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் துவக்க வீரராக களமிறங்க அனைத்து தகுதிகளும் பன்டிடம் உள்ளதாக நான் பார்க்கிறேன். எனவே தோனிக்கு அடுத்து எனக்கு தெரிந்து திறமையான வீரர் பன்ட் தான். நிச்சயம் டெஸ்ட் போட்டியில் சாதிப்பார் என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rishabh pant is the best replacement for dhoni in test matches says sehwag.
Story first published: Friday, August 23, 2019, 20:47 [IST]
Other articles published on Aug 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X