For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்பதானே ஆரம்பிச்சுருக்காரு... போக போக பாருங்க பட்டைய கிளப்புவாரு... ஷிகர் தவான் பாராட்டு யாருக்கு?

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீரர் ஷிகர் தவான் 54 பந்துகளில் 85 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றுள்ளார்.

போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டன் ரிஷப் பந்த் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அதிரடி வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அதிரடி வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில்7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பான வெற்றி பெற்று தனது முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அணயின் இளம் கேப்டன் ரிஷப் பந்த் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

சிறப்பான துவக்கம்

சிறப்பான துவக்கம்

நேற்றைய போட்டியில் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் அதிரடி பார்ட்னர்ஷிப்பில் 138 ரன்களை குவித்தனர். குறிப்பாக ஷிகர் தவான் தன்னுடைய நிலையான மற்றும் அதிரடி ஆட்டத்தின்மூலம் 54 பந்துகளில் 85 ரன்களை குவித்து அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தார்.

ரிஷப்பிற்கு பாராட்டு

ரிஷப்பிற்கு பாராட்டு

அவரது அதிரடி ஆட்டத்தையடுத்து அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பாக அணியை வழிநடத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது சிறப்பான முடிவு என்றும் கூறியுள்ளார்.

வீரர்களுக்கு ஊக்கம்

வீரர்களுக்கு ஊக்கம்

ரிஷப் போட்டி முழுவதிலும் பொறுமையாகவும் அமைதியாகவும் செயல்பட்டதாகவும் தொடர்ந்து அணி வீரர்களை ஊக்குவித்ததாகவும் ஷிகர் பாராட்டு தெரிவித்துள்ளார். அணியில் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றியை சாத்தியப்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறப்பாக்கிக் கொள்வார்

சிறப்பாக்கிக் கொள்வார்

கேப்டனாக அவர் தனது முதல் போட்டியில் விளையாடியுள்ளதைசுட்டிக் காட்டிய ஷிகர் தவான், தொடர்ந்து அனுபவத்தின் மூலம் அவர் தன்னை மேலும் சிறப்பாக்கிக் கொள்வார் என்றும் நம்பிக்கைதெரிவித்துள்ளார். மேலும் மூத்த வீரராக தான் பந்த்திற்கு ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Sunday, April 11, 2021, 15:07 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
As a senior player, I give my advice to Rishabh Pant -Shikar Dhawan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X