For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட்ல ஒருகை பார்த்தாச்சு... டி20, ஒருநாள் தொடர்லயும் பங்கேற்கறாராம் பந்த்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பான ரிஷப் பந்த்

சிறப்பான ரிஷப் பந்த்

இந்தியா -ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 89 ரன்களை அடித்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். கடந்த இன்னிங்சில் விக்கெட் கீப்பராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தியுள்ளார். பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

புஜாரா, அஸ்வின் பாராட்டு

புஜாரா, அஸ்வின் பாராட்டு

புஜாரா, அஸ்வின் உள்ளிட்டவர்களும் பந்த்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அவருக்கு பக்கபலமாக இருந்தாலே அவர் சிறப்பான ஆட்டங்களை தருவார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவர் சிறப்பான திறமையை கொண்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்பு

ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்பு

இந்நிலையில் அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ள குறைந்த ஓவர்கள் போட்டிகளில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இவரது சிறப்பான பங்களிப்பையொட்டி தேர்வாளர்கள் இவரை குறைந்த ஓவர்கள் போட்டிகளிலும் தேர்ந்தெடுப்பார்கள் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 16, 2021, 13:24 [IST]
Other articles published on Feb 16, 2021
English summary
The selectors are likely to bring Pant back into the White Ball cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X