For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போடு..!! பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட்.. கெத்தாக ஃபார்ம்க்கு திரும்பினார்

லெஸ்டர்: இங்கிலாந்து உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டி கிளப்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வரும் ஜூலை மாதம் தொடங்கம் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் லெஸ்டர் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது.

“ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்! “ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்!

ரிஷப் பண்ட், புஜாரா, பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்னா லெஸ்டர் அணிக்காக விளையாடினர்.

கேஎஸ் பரத் அதிரடி

கேஎஸ் பரத் அதிரடி

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித், சுப்மான் கில் நிலைத்து நின்று விளையாட தவறிவிட்டனர். ஹனுமா விஹாரி 3 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகியும் வெளியேற, விராட் கோலி மட்டும் 33 ரன்கள் எடுத்து தாக்குப் பிடித்தார். பிறகு கே.எஸ், பரத் மட்டும் கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் சேர்த்தார்.

முகமது ஷமி அபாரம்

முகமது ஷமி அபாரம்

இதனால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதனையடுத்து லெஸ்டர்சைர் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாம் ஈவன்ஸ் 1 ரன்னிலும், புஜாரா டக் அவுட்டாகியும் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கிம்பர் 31 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

பண்ட் மாஸ்டர் கிளாஸ்

பண்ட் மாஸ்டர் கிளாஸ்

லெஸ்டர் அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த நிலையில், நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தார். கெடந்த சில போட்டிகளாக அரைசதமே அடிக்காத ரிஷப் பண்ட்க்கு, கேஎல் பரத்தின் அரைசதத்தால், டெஸ்ட் இடத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. ஆனால், அது பற்றி எல்லாம் கவலைப்படாத ரிஷப் பண்ட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைக்கு தாம் தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று நிரூபித்தார் பண்ட்.

ரிஷப் பண்ட் 76 ரன்கள்

ரிஷப் பண்ட் 76 ரன்கள்

குறிப்பாக முகமது ஷமி வீசிய பந்தை லாவகமாக கவர் டிரைவ் அடித்து பவுண்டரிக்கு பண்ட் விரட்டினார். இந்திய வீரர்களின் பந்துவீச்சை ஒரு கை பார்த்த ரிஷப் பண்ட், 87 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் லெஸ்டர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Story first published: Friday, June 24, 2022, 20:56 [IST]
Other articles published on Jun 24, 2022
English summary
Rishabh pant master class in Practice match போடு..!! பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட்.. கெத்தாக ஃபார்ம்க்கு திரும்பினார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X