ரிஷப் பண்ட் இடத்துக்கு ஆபத்து? சஞ்சு சாம்சன் போட்ட கிரிப்டோ டிவிட். அதிரடி முடிவு எடுக்குமா பிசிசிஐ

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் சொதப்பி வருகிறார்.

ஐபிஎல் தொடரிலேயே ரிஷப் பண்ட் எடுத்த 20, 30 ரன்களை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அந்த 20, 30 ரன்களை கூட ரிஷப் பண்ட் எடுக்கவில்லை.

கேப்டன் பொறுப்பை ஏற்றதால் ரிஷப் பண்ட்க்கு அழுத்தம் ஏற்பட்டு, அது பேட்டிங்கில் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.

எல்லாமே வீணாக போச்சு.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி.. மீண்டும் சொதப்பிய இந்தியாஎல்லாமே வீணாக போச்சு.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி.. மீண்டும் சொதப்பிய இந்தியா

ரிஷப் பண்ட் செயல்பாடு

ரிஷப் பண்ட் செயல்பாடு

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 29 ரன்கள் எடுத்த பண்ட், 2வது டி20 போட்டியில் 5 ரன்களும், 3வது டி20 போட்டியில் 6 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட், அவருடைய சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட்டையே 125 என்ற அளவில் தான் வைத்துள்ளார்.

ஒரே ஒரு சாதகம்

ஒரே ஒரு சாதகம்

46 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 3 முறை தான் அரைசதம் அடித்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட் இடத்திற்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது. தற்போது நடுவரிசையில் இவர் மட்டும் இடது கை ஆட்டக்காரர், அதுவும் ஜடேஜா அணிக்கு திரும்பினால், ரிஷப் பண்ட்க்கு சாதகமான அந்த ஒரு விஷயமும் போய்விடும்.

சஞ்சு சாம்சனால் ஆபத்து

சஞ்சு சாம்சனால் ஆபத்து

இதனால், தென்னாப்பிரிக்கா தொடருக்கான எஞ்சிய 2 போட்டியில் ரிஷப் பண்ட் தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும். இல்லையேனில் ரிஷப் பண்ட் இடத்திற்கு சஞ்ச சாம்சனால் ஆபத்து வர வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆட கூடியவர். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் இவருடைய ஆட்டம் கச்சிதமாக இருக்கும்.

சஞ்சுவின் கிரிப்டோ டிவிட்

சஞ்சுவின் கிரிப்டோ டிவிட்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட ராஜஸ்தான் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற சஞ்சு சாம்சன், 17 போட்டியில் 458 ரன்களை குவித்துள்ளார். ரிஷப் பண்ட் சொதப்பி வரும் நிலையில், பயிற்சியில் அதிரடியாக விளையாடும் புகைப்படங்களை சஞ்சு சாம்சன் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ரிஷப் பண்ட்க்கு கிடைக்கும் வாய்ப்பில் 50 சதவீதம் கூட சாம்சனுக்கு கிடைப்பதில்லை என்று ரசிகர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rishabh Pant Place in Danger as sanju Samson waiting for opportunity ரிஷப் பண்ட் இடத்துக்கு ஆபத்து? சஞ்சு சாம்சன் போட்ட கிரிப்டோ டிவிட். அதிரடி முடிவு எடுக்குமா பிசிசிஐ
Story first published: Wednesday, June 15, 2022, 20:13 [IST]
Other articles published on Jun 15, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X