For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாய்ப்பு கொடுத்தோம்.. ஏமாற்றிவிட்டார்.. ரிஷாப் பண்ட் மேல் பொங்கிய பிசிசிஐ.. அதிரடி நீக்கம்!

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இளம் வீரர் ரிஷாப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

IND VS SA 3RD T20 | தொடர்ந்து சொதப்பும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்

டெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இளம் வீரர் ரிஷாப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய அணியின் எதிர்காலம் என்று கணிக்கப்பட்டவர்தான் ரிஷாப் பண்ட். தோனிக்கு மாற்றாக இவர் இந்திய அணியில் நன்றாக கீப்பிங் செய்வார், அவரின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரிஷாப் பண்ட் உலகக் கோப்பை தொடரில் சரியாக ஆடவில்லை. அந்த தொடர் முழுக்க இவர் மோசமான ஷாட்களை ஆடி அவுட்டானார்.

டக் அவுட்டிலும் சாதனை படைத்த ரிஷப் பந்த் டக் அவுட்டிலும் சாதனை படைத்த ரிஷப் பந்த்

என்ன விமர்சனம்

என்ன விமர்சனம்

அதேபோல் அவரின் பொறுப்பற்ற ஆட்டம் மற்றும் கீப்பிங் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

அதேபோல்தான் இந்தியா ஆடிய மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சரியாக ஆடவில்லை . இதனால் அவருக்கு எதிராக கடுமையா விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இளம் வீரர் ரிஷாப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் சீரிஸ் போட்டி நாளை தொடங்குகிறது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, விர்த்திமான் சாஹா, இஷாந்த் சர்மா , முகமது சமி ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

பண்ட நீக்கம் குறித்து கோலி தனது பேட்டியில், இந்திய அணியில் பண்டிட்ற்கு போதுமான வாய்ப்புகளை கொடுத்துவிட்டோம். அவர் சில போட்டிகளில் சரியாக விளையாடினார். அவர் தொடக்கத்தில் கொஞ்சம் நன்றாக ஆடினார். அதை நாங்கள் எப்போதும் கருத்தில் கொள்வோம். ஆனால் அணியில் இப்போது சாகா தேவை.

ஏன் தேவை

ஏன் தேவை

டெஸ்ட் போட்டிகளில் சாகா மிகவும் நன்றாக ஆட கூடிய நபர். அவர் மிகவும் நல்ல கீப்பர். இப்போது இருக்கும் கீப்பர்களில் இவர்தான் சிறந்தவர் என்று கூட நான் கூறுவேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நிலைத்து ஆட கூடியவர்.

காயம்

காயம்

அவர் இப்போதுதான் காயத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அதனால் அவர் அணியில் செட் ஆவதற்கு போதுமான காலம் அளிக்கப்படும். பாண்டிற்கு அணியில் போதுமான கால அவகாசம் கொடுத்தது போல சாகாவிற்கும் அணியில் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படும், என்று கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, October 1, 2019, 16:16 [IST]
Other articles published on Oct 1, 2019
English summary
Rishabh Pant removed for test team of India After constant failures in recent times.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X