For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாராட்டியவருக்கு உரிய மரியாதை செலுத்திய பண்ட்.... நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: தன் ஆட்டம் குறித்து பாராட்டியவருக்கு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ள பதில் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரிஷப் பண்ட்-ன் ஆட்டம் குறித்து பல்வேறு பிரபலங்களும் பாராட்டு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு மறக்காமல் பதிலளித்து வருகிறார் ரிஷப் பண்ட்

மிரட்டல்

மிரட்டல்

ஆஸ்திரேலிய தொடரில் பண்ட்-க்கு மீண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது முதல் இன்றுவரை அவர் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். இங்கிலாந்துடனான 2வது டெஸ்டிலும் ரிஷப் பண்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

பேட்டிங்கில் அதிரடி காட்டினாலும் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார். கீப்பிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வந்தனர். ஆனால் 2வது டெஸ்டில் கீப்பிங்கிலும் பண்ட் அசத்தினார்.

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்

முதல் இன்னிங்சில் 39வது ஓவரில் சிராஜ் பந்துவீசிய பந்து, எதிரில் இருந்த இங்கிலாந்து அணி ஓப்பனர் ஒல்லி போப் க்ளவுஸில் பட்டு எட்ஜானது. இதனை ரிஷப் பண்ட் ஒற்றை கையில் தாவி பிடித்தார். அதே போல் ஜாக் லீச்சை வெளியேற்றியது மற்றும் டேனியல் லாரன்ஸ், மொயின் அலி ஆகியோரை ஸ்டம்பிங் செய்து வியக்க வைத்தார்.

கில் கிரிஸ்ட்

கில் கிரிஸ்ட்

ரிஷப் பண்ட்டின் கீப்பிங் குறித்து ட்வீட் செய்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில் கிரிஸ்ட், பாராட்டுத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ள ரிஷப் பண்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

 கோலி பாராட்டு

கோலி பாராட்டு

இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இனி வரும் போட்டிகளிலும் ரிஷப் பண்ட்டின் கீப்பிங்கில் மேம்படுத்தி அணிக்கு பலம் சேர்ப்போம் என விராட் கோலி தெரிவித்திருந்தார்.

Story first published: Wednesday, February 17, 2021, 22:08 [IST]
Other articles published on Feb 17, 2021
English summary
Rishabh Pant responds after Gilchrist praises his Performance in 2nd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X