For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அந்த 2 இலக்குதான் இனி..” தென்னாப்பிரிக்க தொடரில் ஏமாற்றம்.. ரிஷப் பண்ட்-ன் அடுத்த திட்டம் இதுதான்!

மும்பை: தென்னாப்பிரிக்க தொடரை தொடர்ந்து ரிஷப் பண்ட் தனது அடுத்த 2 இலக்கு என்னவென்பது குறித்து பேசியுள்ளார்.

Recommended Video

Rahul Dravid வேதனை! South Africa தொடர் தான் மோசம் | *cricket

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி நேற்று கைவிடப்பட்டது.

நீண்ட நேரமாக மழை நீடித்ததால் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து 2 - 2 தொடர் சமனில் முடிவடைந்தது.

ரிஷப் பண்ட்-ன் உலகக்கோப்பை வாய்ப்பு??.. ராகுல் டிராவிட் வெளிப்படையான பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!! ரிஷப் பண்ட்-ன் உலகக்கோப்பை வாய்ப்பு??.. ராகுல் டிராவிட் வெளிப்படையான பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

பண்ட்-ன் கேப்டன்சி

பண்ட்-ன் கேப்டன்சி

இந்த தொடர் சமனில் முடிவடைந்தாலும், ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சி தனி கவனத்தை ஈர்த்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால், திடீரென கேப்டனான ரிஷப் பண்ட், முதல் 2 போட்டிகளில் தோல்விகளையே பெற்றுக்கொடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்காவின் பக்கம் தொடர் சரிந்தது. எனினும் அடுத்த 2 போட்டிகளில் வெற்றியை பெற்று அசத்தியது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த 4 டி20 போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் ப்ளேயிங் 11ல் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. சொதப்பிய வீரர்களுக்கு வாய்ப்பும், நம்பிக்கையையும் கொடுத்து, அணியை மீட்டார். இதனால் அவரின் மீது கேப்டன்சி-க்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

பண்ட்-ன் இலக்கு

பண்ட்-ன் இலக்கு

இந்நிலையில் தனது அடுத்த 2 இலக்குகள் குறித்து பண்ட் பேசியுள்ளார். தென்னாப்பிரிக்க தொடருக்கு பின் அயர்லாந்து தொடரில் பண்ட்-க்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அவர் நேரடியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். இதில் இந்தியா 2 - 1 என முன்னிலையில் உள்ள நிலையில் எப்படியாவது வெற்றி பெற்று தரவேண்டும் என உறுதி கொடுத்துள்ளார்.

2வது இலக்கு

2வது இலக்கு

இதே போல தன்மீதான விமர்சனம் குறித்தும் சபதம் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க தொடரில் பண்ட் 5 போட்டிகளில் 57 ரன்களை மட்டுமே அடித்தார். எனவே இனி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போவதாகவும், இங்கிலாந்து தொடரில் எனது சிறப்பான பேட்டிங்கை ரசிகர்கள் பார்ப்பார்கள் எனவும் பண்ட் உறுதி கொடுத்துள்ளார்.

Story first published: Monday, June 20, 2022, 11:37 [IST]
Other articles published on Jun 20, 2022
English summary
Rishabh pant in India vs south africa series ( தென்னாப்பிரிக்க தொடரில் ரிஷப் பண்ட் கேப்டன்சி ) இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், தனது அடுத்த 2 இலக்குகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X