For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட்-ன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. உடல்நிலை குறித்து அட்டகாச அப்டேட்.. ஆனாலும் ஒரு குறை

மும்பை: கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை குறித்து புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அவர் என்று குணமடைந்து வருவார் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி ஹரிதுவார் அருகே மோசமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தலை மற்றும் உடல் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதியான பண்ட்-க்கு வலதுகாலில் இரண்டு இடங்களில் தசைநார்கள் கிழிந்ததாக தெரிகிறது.

நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டுநீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு

டிஸ்சார்ஜ் நாட்கள்

டிஸ்சார்ஜ் நாட்கள்

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து ரிஷப் பண்ட் நன்கு குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர் டின்ஷா பரித்வாலாவின் குழு வெளியிட்டுள்ள தகவலின் படி, பண்ட்-க்கு 3 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்தோம். அதில் இருந்து அவர் முன்னேறி வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய தகுதியாகிவிட்டார். வீட்டிற்கு செல்லலாம் எனக்கூறியுள்ளனர்.

2வது சிகிச்சை

2வது சிகிச்சை

இந்த வாரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டில் இருந்தே காயம் ஆறும் வரையில் ஓய்வெடுக்கவுள்ளார். பிசியோதெரபிஸ்ட்கள் அவருக்கு உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுக்கவுள்ளனர். அதன்பின் அடுத்த மாதம் வலதுகாலில் உள்ள மற்றொரு கிழிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளனர். அப்போது அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க தேவையில்லை எனக்கூறப்படுகிறது.

 எப்போது கம்பேக் தருவார்?

எப்போது கம்பேக் தருவார்?

2வது அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பண்ட் மீண்டும் களத்திற்கு திரும்புவதற்கான நாட்கள் தொடங்கிவிடும். அதாவது அறுவை சிகிச்சைக்கான வலிகள் குறைந்து காயம் குணமாக 4 - 5 மாதங்கள் வரை ஆகலாம். அதன்பின்னர் பிசிசிஐ-யிடம் செல்வதற்கு 2 மாதங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டியிருக்கும் எனத்தெரிகிறது. எனினும் உலகக்கோப்பைக்கு அவர் தயாராக இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்

இது ஒருபுறம் இருக்க, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு நல்லது நடந்துள்ளது. ஏனென்றால் ரிஷப் பண்ட் இருந்தாலே இந்திய அணியின் ரன் ரேட் அதிவேகமாக உயரும். கடந்தமுறை ஆஸ்திரேலியாவின் தோல்விக்கும் பண்ட் தான் காரணமாக இருந்தார். எனவே அவர் இந்த முறை இல்லாதது அந்த அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

Story first published: Monday, January 30, 2023, 21:30 [IST]
Other articles published on Jan 30, 2023
English summary
Indian wicket keeper batsmen Rishabh pant's New health update is out, Here is the discharge date
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X