For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போதைக்கு நான் தான் பிரச்சினையே.. உண்மையை ஒப்பு கொண்ட ரிஷப் பண்ட்.. DK-க்கு எதிரணி பாராட்டு

ராஜ்காட்: தென்னாப்பிரிக்க அணிக்கு இடையிலான 4வது டி20 போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி 2க்கு 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 169 ரன்களை குவித்தது.

ஒரே ஓவரில் 3 விக்கெட்.. 6 பந்துகளில் மாறிய ஆட்டம்.. ஆவேஷ் சூறாவளியில் சிக்கிய தென்னாப்பிரிக்காஒரே ஓவரில் 3 விக்கெட்.. 6 பந்துகளில் மாறிய ஆட்டம்.. ஆவேஷ் சூறாவளியில் சிக்கிய தென்னாப்பிரிக்கா

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆவேஷ் கானின் அபார பந்துவீச்சால் 87 ரன்களில் சுருண்டது.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

கேப்டன் பெவுமாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக கேசவ் மகாராஜ் போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசினார். எங்களுடைய பிரச்சினையே பேட்டிங் தான். தொடர்ந்து 2 போட்டிகளாக பேட்டிங் இறுதியில் நாங்கள் ரன் அடிக்கவே இல்லை,நாங்கள் திட்டமிட்டப்படி ஏதும் செய்யவில்லை. பவர்பிளே முடிந்ததும் எங்களுக்கு எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை.

இந்தியாவுக்கு பாராட்டு

இந்தியாவுக்கு பாராட்டு

இந்திய அணி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் கலக்கினார். இனி நாங்கள் வகுத்த திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் சுழற்பந்துவீசுவது கடினம் தான், மைதானத்தின் அளவு எல்லாம் சிறியதாக இருக்கும். பெங்களூரு போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் அனல் பறக்கும் என நம்புகிறேன்.

Recommended Video

IND vs SA வெற்றிக்கு பிறகு Rishabh Pant சொன்ன விஷயம் | *Cricket
காமெடி பண்ண ரிஷப்

காமெடி பண்ண ரிஷப்

வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், நல்ல கிரிக்கெட் ஆடுவது குறித்தும் கவனம் செலுத்தினோம். அதனால் எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைத்துவிட்டது. எந்த அணி நன்றாக விளையாடுகிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். தொடர்ந்து 4 போட்டியில் டாஸை இழந்துவிட்டேன். அடுத்த முறை வலது கையில் டாஸ் போட்டு வெற்றி பெற முயற்சிப்பேன்.

பேட்டிங்கில் கவனம்

பேட்டிங்கில் கவனம்

தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக் தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு அதிரடி காட்டி எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். அணியில் தற்போது இருக்கும் ஒரே குறை, என்னுடைய பேட்டிங் மட்டும் தான், கடைசி போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

Story first published: Saturday, June 18, 2022, 17:04 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
Rishabh pant speech after beating south Africa by 82 runs இப்போதைக்கு நான் தான் பிரச்சினையே.. உண்மையை ஒப்பு கொண்ட ரிஷப் பண்ட்.. DK-க்கு எதிரணி பாராட்டு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X