For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹெல்மட்டில் அடித்த பந்து -ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது போட்டியில் பங்கேற்காத ரிஷப் பந்த்

Recommended Video

IND VS AUS 1ST ODI | Pant again failed in crucial situation

பெங்களூரு : மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பந்த்தின் ஹெல்மட்டில் பந்து அடித்ததையடுத்து அவர் போட்டியின் இடையிலேயே விலகினார்.

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் பாட் கமின்ஸ் அடித்த பந்து பவுன்சாகி ரிஷப் பந்தின் ஹெல்மட்டில் பட்டு தெரித்தது.

போட்டியில் 33 பந்துகளுக்கு 28 ரன்களை அடித்திருந்த நிலையில், போட்டியின் இடையிலேயே ரிஷப் பந்த் விலகினார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. தற்போது தேசிய கிரிக்கெட் சங்கத்தின் பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல் சர்வதேச ஒருநாள் போட்டி

முதல் சர்வதேச ஒருநாள் போட்டி

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

போட்டியிலிருந்து விலகிய ரிஷப் பந்த்

போட்டியிலிருந்து விலகிய ரிஷப் பந்த்

போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பந்த், 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கமின்ஸ் அடித்த பந்து அவரது ஹெல்மட்டில் பட்டு தெறித்தது. இதையடுத்து போட்டியிலிருந்து பாதியிலேயே அவர் விலகினார்.

தேசிய கிரிக்கெட் சங்கத்தில் ஆய்வு

தேசிய கிரிக்கெட் சங்கத்தில் ஆய்வு

இந்நிலையில், மருத்துவமனையில் அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் உடல்நலத்துடன் உள்ளதாக தெரிவித்த பிசிசிஐ, ஆனால் ஐசிசியின் விதிமுறைகளின்படி அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் சங்கத்தின்கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

பங்கேற்காத ரிஷப் பந்த்

பங்கேற்காத ரிஷப் பந்த்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோதும் 2வது போட்டி ராஜ்காட்டில் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் ரிஷப் பந்த் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

இந்நிலையில் வரும் 19ம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள 3வது மற்றும் இறுதி போட்டியில் ரிஷப் பந்த் பங்கேற்பாரா என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரியவரும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

Story first published: Thursday, January 16, 2020, 12:35 [IST]
Other articles published on Jan 16, 2020
English summary
Rishabh Pant Ruled out of 2nd ODI Against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X