For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிரட்டலான கால்பந்து மேட்ச்.. ஒரேயொரு "ஆள்" மட்டும்.. ஒரு ஓரத்துல.. "முக்காடு" போட்டும் சிக்கிய பண்ட்

லண்டன்: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் ஃபுட்பால் மேட்ச் பார்க்கச் சென்றிருக்கிறார். இதனால் அங்கு திரளான ரசிகர்கள் கூட்டம் கூடியிருக்கிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கொடி பறக்குதா! கேல் ரத்னா விருதுகள்.. 2 தமிழர்கள் பெயர்கள் பரிந்துரை..கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்கொடி பறக்குதா! கேல் ரத்னா விருதுகள்.. 2 தமிழர்கள் பெயர்கள் பரிந்துரை..கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்

இதில், இங்கிலாந்து 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனியை ஊதித்தள்ளியது.

ஸ்டேடியத்தில் ரிஷப் பண்ட்

ஸ்டேடியத்தில் ரிஷப் பண்ட்

இப்போட்டி லண்டனில் வெம்ப்ளே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் இப்போட்டியை காண குவிந்திருக்க, இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் உள்ளிட்ட பல பிரபலங்களும் தவறால் ஆஜர் ஆகியிருந்தனர். போட்டி சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்க, அங்கு கருப்பு நிற ஸ்வெட்டர் டைப் ஜெர்ஸி அணிந்து, தலையில் முக்காடு போட்டு ஒருவர் ரொம்ப சீரியஸாக போட்டியை ரசித்துக் கொண்டிருக்க, யாரென்று பார்த்தால் நம்ம இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.

ரிஷப் ட்வீட்

ரிஷப் ட்வீட்

பிறகு, ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கூடிவிட்டனர். பலரும் ரிஷப்புடன் இணைந்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். சிலர், ரிஷப்பிடம் ஆட்டோகிராஃப் வாங்கிச் சென்றனர். இதுகுறித்த புகைப்படங்களை பண்ட் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் இடையேயான கால்பந்து போட்டியை பார்த்ததில் நல்ல அனுபவமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் 2 வெற்றி

ஒரே நாளில் 2 வெற்றி

முன்னதாக, இதே போட்டியை டிவியின் பார்த்து ரசித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தங்கள் கால்பந்து அணியின் வெற்றியை லைவாக பார்த்து கொண்டாடியது. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உள்ளிட்ட வீரர்கள், தங்கள் அணி வீரர் கேன் அடித்த கோலை கொண்டாடிய தருணங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். குறிப்பாக, இலங்கை அணியின் முதல் ஒருநாள் போட்டியில் வீழ்த்திய பிறகு, இந்த ஆட்டத்தை கண்டு ரசித்து வெற்றியை கொண்டாடியது இங்கிலாந்து அணி.

ரசிகர்கள் சந்தேகம்

ரசிகர்கள் சந்தேகம்

அதெல்லாம் சரி.. நம்ம ரிஷப் பண்ட், எப்படி பயோ-பபுளை மீறி வெளியேச் சென்றார்? என்று சில ரசிகர்களுக்கு சந்தேகம் எழலாம். அவர்களுக்கெல்லாம் ஒரு அப்டேட். இந்திய அணி இப்போது குவாராண்டைனில் இல்லை. அவர்களுக்கு பத்து நாட்களுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் அவர் இங்கிலாந்தில் வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழிக்கலாம்.

Story first published: Thursday, July 1, 2021, 0:01 [IST]
Other articles published on Jul 1, 2021
English summary
rishabh pant watched england vs germany match - ரிஷப் பண்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X