For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் பந்த் முறியடிப்பாரு பார்த்துக்கங்க... கிரண் மோர் நம்பிக்கை

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்.

சமீபத்தில் அவருடைய விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியின் சாதனைகளை அனைத்தையும் ரிஷப் பந்த் முறியடிப்பார் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் ஆதிக்கம்

ரிஷப் பந்த் ஆதிக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடர் முழுவதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் அவர் தனது சிறப்பை வெளிப்படுத்தினார்.

2018ல் முதல் தொடர்

2018ல் முதல் தொடர்

கடந்த 2018 அக்டோபரில் இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங்கை மேற்கொண்ட பந்த், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்மூலம் தனது இரண்டாவது டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளார்.

கிரண் மோர் வியப்பு

கிரண் மோர் வியப்பு

இதுவரை 20 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், இந்தியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளது குறித்து முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் வியப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மாறும் பிட்ச்கள் காணப்படும் சூழலில் இங்கு தொடர்ந்து விளையாடினால் மட்டுமே பந்த் சிறப்பான அனுபவத்தை பெற முடியும் என்றும் தன்னை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறைவான வாய்ப்புகள்

குறைவான வாய்ப்புகள்

வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பாக தன்னுடைய விக்கெட் கீப்பிங்கை வெளிப்படுத்திவரும் பந்த்திற்கு ஏன் இந்தியாவில் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் தனது வியப்பை தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பந்த் சிறப்பான வெற்றியாளர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பந்த் முறியடிப்பார்

பந்த் முறியடிப்பார்

விக்கெட் கீப்பிங்கில் தினமும் கவனமுடன் கற்றுக் கொள்ளும் சூழல் உள்ளதாகவும் அதை ரிஷப் பந்த் தற்போதைய தொடரில் சிறப்பாக செய்து வருவதாகவும் விரைவில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியின் சாதனைகளை அவர் முறியடிப்பார் என்றும் மோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு அழைத்து செல்கிறார்

வெற்றிக்கு அழைத்து செல்கிறார்

விரித்திமான் சாஹா மற்றும் பந்த் இருவரும் சிறப்பான கீப்பிங்கை அளித்துவருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ள கிரண் மோர், ஆனால் 6வது இடத்தில் இறங்கி இந்தியாவை தனி வீரராக வெற்றிக்கு அழைத்து செல்வதில் பந்த் வல்லவராக திகழ்வதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவின் தற்போதைய தேவை இது என்றும் கூறியுள்ளார்.

Story first published: Monday, March 8, 2021, 17:47 [IST]
Other articles published on Mar 8, 2021
English summary
Coming at No. 6, Pant is a capable batsman who can win Tests singlehandedly -Kiran More
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X